பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதற்காலப் பல்லவர்

49



தந்தை ஆந்திர பதத்தை ஆண்டுவந்த போது, தொண்டை நாட்டைக் கைப்பற்றி இருக்கலாம். (2) தான் கஞ்சியிற்றானே தங்கித் தந்தை இறக்குமளவும் இளவரசனாகவே இருந்திருக்கலாம். (தந்தை இருப்ப, மகன் தனி மாகாணத்தை ஆளுதல் பல்லவர் பழக்கம் என்பதைப் பட்டயங்களே காட்டுகின்றன.) (3) தந்தை இறந்த பிறகு பல்லவப் பேரரசுக்குக் காஞ்சியைத் தலைநகரமாக்கிப் பலநாடுகளை வென்று, தர்ம மகா ராசாதிராசனாகி இருக்கலாம். இப் பேரரசன் காலம் ஏறத்தாழக் கி.பி. 250-275 எனக் கொள்ளலாம்.

இக்காலப் பல்லவர்

இவனுக்குப்பின் விசய ஸ்கந்தவர்மன் பல்லவ நாட்டை ஆண்டான். ஆயின், அவனுக்கும் சிவஸ்கந்தவர்மனுக்கும் என்ன உறவு என்பது விளங்கவில்லை. அவனது ஆட்சிக் காலத்தில் இளவரசனான புத்தவர்மன் மனைவி சாருதேவி என்பவள் விட்ட பட்டயம் காணின், புத்தவர்மன் விசயஸ்கந்தவர்மனின் மகன் எனக் கோடலில் தவறில்லை. எனினும், உறுதியாகக் கூறுதற்கில்லை. புத்தவர்மனுக்கு புத்யங்குரன் என்றொரு மைந்தன் இருந்தான் என்பதும் குண்பதேயப் பட்டயத்தால் தெரிகிறது. இம் மூன்று பட்டயங்களைக் காண்கையில், இம் முதற்காலப் பல்லவர் பெயர்களைக் கீழே வருமாறு முறைப் படுத்தலாம்.

பப்புதேவன்[1]

|
சிவஸ்கந்தவர்மன்
|
விசயஸ்கந்தவர்மன்
|
இளவரசன் புத்தவர்மன்
|

புத்பங்குரன்

  1. S.I.I. Vol p506 foot-note by H. Krishna Sastry. இடைக்காலப் பல்லவருள் ஒருவனான ‘வீரகூர்ச்சவர்மனே இந்தப் பப்பதேவன்’ என்பது ஒர் ஆராய்ச்சியாளர் கருத்து.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பல்லவர்_வரலாறு.pdf/69&oldid=583594" இலிருந்து மீள்விக்கப்பட்டது