பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

பல்லவர் வரலாறு


6. இடைக்காலப் பல்லவர்
(கி.பி. 340-575)

சுற்றுப்புற நாடுகள்

இடைக்காலப் பல்லவர் பட்டயங்களைக் கொண்டு அவர் வரலாறு அறிய முற்படு முன், அவர் காலத்தில் இருந்த சுற்றுப்புற நாடுகளைப் பற்றிய தெளிவு இருத்தல் இன்றியமையாதது ஆதலின், முதற்கண் அந்நாடுகளைப் பற்றி ஓரளவு அறிந்துகோடல்நலமாகும்.

விஷ்ணுகுண்டர் (கி.பி. 450-700)

கோதாவரிக்கு வடபாற்பட்ட நிலப்பகுதியை ஆண்டவர் விஷ்ணுகுண்டர் ஆவர். இவர்கள் வாகாடகருடன் பெண்வழித் தொடர்புடையவராக இருந்தனர். இவர்கள் நிலப்பகுதி பையப் பையச் சாளுக்கியர் கைப்பட்டது.[1]

சாலங்காயனர் (கி.பி. 320-620)

கோதாவரி, கிருஷ்னை யாறுகளுக்கு இடையில் இருந்து ஆண்டவர் சாலங்காயனர் எனப்பட்டனர். இவர்கள் தலை நகரம் வேங்கி என்பது. இவர்கள் நந்தி வழிபாட்டினர் (சாலங்காயன-நந்தி). இம் மரபரசருள் இரண்டாம் மன்னனான அத்திவர்மனே (கி.பி.345-370) சமுத்திர குப்தனை எதிர்த்த அரசருள் ஒருவன். இந்நாடு கிருஷ்ணைக்குத் தெற்கே பரவியிருந்தது. அந்தப் பகுதி பல்லவர் கைப்பட்டது. மற்றப் பகுதி சாளுக்கியர் கைப்பட்டு அழிவுற்றது.[2]

ஆனந்தர் (கி.பி. 500-600)

இக்குவாகர் ஆட்சியில் இருந்த குண்டூர்-கிஷ்ணைக் கோட்டங்களைச் சேர்ந்த நிலப்பகுதி பல்லவர் கைக்குமாறியது. பின் அப்பகுதி


  1. Vide “The place of Virakurcha in the pallava Genealogy, “Madras Christian College Magazine’ April, 1928.
    D. Sircar’s “Successors of the Satavahanas’, pp.97.140.
  2. Ibid. pp. 73,82,83.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பல்லவர்_வரலாறு.pdf/70&oldid=583596" இலிருந்து மீள்விக்கப்பட்டது