பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/73

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
53
இடைக்காலப் பல்லவர்


அரிவர்மன்[1] (கி.பி. 535-570)

இக்கதம்பருள் உட்பிரிவுகள் சில உண்டு. மேற்பட்டியலிற் கண்ட காகுத்த வர்மனுக்கு மகனும் சாந்தி வர்மனுக்கு இளவலுமான கிருஷ்ணவர்மன் என்பவன் வழியினர் ஒரு பிரிவினர் ஆவர். இக் கிருஷ்ணவர்மன் பல்லவரோடு நடத்திய போரில் இறந்துவிட்டான். இவன் மகனான விஷ்ணுவர்மன் தன் பெரியப்பனான சாந்திவர்மன் அரசாட்சியில் தன்னைத் தர்ம மகாராசன் என்று ஒரு கல்வெட்டில் கூறிக்கொள்கிறான். எனவே, கிருஷ்ண வர்மன் மரபினர் குந்தள நாட்டின் ஒரு பகுதியைத் தனிப்பட்ட முறையில் ஆட்சி செய்தவராவர். காகுத்தவர்மன் மூன்று நாடுகட்கு அரசன் என்று தன்னைக் கூறிக் கொள்வதால் அவன் காலத்திலேயே குந்தள நாடு மூவகைக் கதம்பர் ஆட்சியில் இருந்ததென்பதை அறியலாம்.[2] ஆயினும் பிற்காலத்தில் இம் மரபினருக்குள் போர் மூண்டது. ‘இரவீவர்மன், கிருஷ்ணவர்மன் மரபைச்சேர்ந்த விஷ்ணுவர்மனைக் கொன்று, பல்லவனை முறியடித்தான்; பலாசிகாவைத் தனதாக்கிக் கொண்டான்’ என்று வரும் பட்டயச் செய்தியால் கிருஷ்ண வர்மன் மரபினர் பலாசிகாவைக் (இப்போதைய ஹல்சி) கோ நகரமாகக் கொண்டு குந்தள நாட்டின் தென்பகுதியை ஆண்டு வந்தவர் என்பது விளங்கும். மகாராசன் குமாரவர்மன், அவன் மகன் மாந்தாத்ரி வர்மன், மாது வர்மன், தாமோதர வர்மன் முதலிய கதம்பர் மரபு ஒன்றும் குந்தள நாட்டில் இருந்ததாகத் தெரிகிறது. இவருள் வனவாசியைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட சாந்தி வர்மன் மரபினர்க்கும் இடைக்காலப் பல்லவர்க்குமே ஓயாத போராட்டங்கள் நடைபெற்றன. கதம்பர் மரபினருக்குள் போர்களும் கலகங்களும் நடந்தபோதும்,[3] கதம்பர் தமக்குத் தெற்கே இருந்த கங்கரை வெல்ல முயன்றபோதும், இவ் விருதிறத்தாரும் பல்லவர் உதவியை நாடினர். அப்பொழுது பல்லவர் தலையிட்டனர்.[4] மேலும், கதம்பப் பேரரசைத்


  1. D. Sircar’s “Successors of the Satavahanas’ pp.232, 238-240.
  2. D. Sircar’s Successors of “Satavahanas’ pp.258-259
  3. Ibid pp.281, 283.
  4. R. Gopalan’s “Pallavas of Kanchi,” pp.66,67.