பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/78

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
58
பல்லவர் வரலாறு


இடமில்லை.[1] இந்தக் குமார விஷ்ணுவின் ஆட்சிக்காலமும் சமுத்திர குப்தன் படையெடுப்பின் காலமும் ஒத்திருத்தலின், குமார விஷ்ணுவும் அல்லகாபாத் கல்வெட்டில் குறிக்கப்பட்ட விஷ்ணுகோபனும் ஒருவனே எனத் துணியலாம். எனவே, முதலாம் குமாரவிஷ்ணு (விஷ்ணுகோபன்) சமுத்திரகுப்தன்காலத்தில் காஞ்சி யரசனாக இருந்தான் என்பது தெளிவு. ஆகவே, அவனது காலம் ஏறக்குறையக் கி.பி. 340-350 எனக் கூறலாம்.

(2) லோகவிபாக நூலின் கணக்குப்படி சிம்மவர்மன் பட்டம் பெற்ற ஆண்டு கி.பி. 436 ஆகின்றது. அவனையும் (அவன் மகனான) கந்தவர்மன் என்னும் மற்றொரு பல்லவனையும் அரிவர்மனும் இரண்டாம் மாதவனும் பட்டமேறஉதவி புரிந்தவர் எனக் கி.பி. 475இல் போந்த இரண்டாம் மாதவனது பட்டயம் கூறலால், அங்ஙனம் அவர்களைப் பட்டத்தில் ஏற்றியவர் நமது பல்லவர் பட்டியலில் உள்ளபடி முதலாம் சிம்மவர்மனும் அவன் மகனான மூன்றாம் கந்தவர்மனுமே ஆவர். எனவே, கங்கர் பட்டயம் கண்ட அரசனும் அரிவர்மனும் சிம்மவர்மன் பட்டம் பெற்ற கி.பி. 435 முதல் பட்டயத் தோற்றம் வரை (கி.பி. 475 வரை) ஆண்டிருக்கலாம். அஃதாவது, சிம்மவர்மன், அவன் மகன் கந்தவர்மன் ஆகிய இருவரும் கி.பி. 436 முதல் 475 வரை ஆட்சிபுரிந்திருக்கலாம் எனக்கோடலில் தவறில்லை.[2]

கங்கர் வரலாற்றை ஒருவாறு ஆராய்ச்சி செய்த ஆசிரியர் ஒருவர் கங்கர் பட்டயங்களைச் சோதித்து, (1) அரிவர்மன் காலம் ஏறத்தாழக் கி.பி. 436-460 என்றும், (2) இரண்டாம் மாதவன் காலம் கி.பி. 460-500 என்றும் குறித்துள்ளார்.[3] இதுபொருந்துவதாயின், பல்லவ வேந்தருள் (1) முதலாம் சிம்மவர்மன் காலம் கி.பி. 436-460 எனவும், (2) மூன்றாம் கந்தவர்மன் காலம் ஏறத்தாழக் கி.பி. 460-475 எனவும் கொள்ளலாம்.

(3) சிம்மவர்மன் பட்டம் பெற்றது கி.பி. 436 எனின், அவன்


  1. Prof. Durbrueil’s “Ancient History of the Dekkhan’ p.54.
  2. M.V. Krishna Rao’s “Ganges of Talakad,’ pp.11,12,29,32.
  3. Ibid,pp.29, 31