பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/80

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
60
பல்லவர் வரலாறு


ஆராய்ச்சியாளர் பல குழப்பமான முடிவுகளை வெளியிட்டுத் தம்மைக் குழப்பிக் கொண்டதோடு படிப்பவரையும் குழம்பி விட்டனர். பல்லவர் பட்டியலை வகுத்தவர் பலர். அவற்றிற்குக் காரணங் கூறியவர் பலர். அவற்றுள் ஒன்றேனும் முற்றத் தெளிவு தாராமையின், ஈண்டு இடம் பெற்றிலது. அவர்கள் ஒருமுறை பற்றி அரசர் முறைவைப்பே முயன்று முடிக்கின்றனர்; பின்னர்ச் சில உண்மைகளைத் தக்க காரணம் கூறி வற்புறுத்த முயல்கையில் அம் முறைவைப்புத்தவறாகின்றது. அத்தவற்றை மறைக்கப்பட்டயத்தில் இந்தத் தொடர் முன்னதாக இருக்க வேண்டும், இவன் அவன் பாட்டனாக இருக்க வேண்டும்..... இவன் 40 ஆண்டுகட்கு மேலும் அரசாண்டிருக்கலாம் அன்றோ? என்றெல்லாம் கூறி இடர்ப்படுகின்றனர். இவ்வளவு குழப்பத்திற்கும் இவ்விடைக்காலப் பல்லவர் பரம்பரை இடம் தருகின்றது.

இரண்டாம் கந்தவர்மன் மக்கள் மூவர் பரம்பரையினரும் ஒரே பட்டத்தை அடுத்தடுத்துப் பெற முடியுமா? அங்ஙனம் பெற்றனரா? என்பது தெளிவாகவில்லை. ஆயின், ‘விஷ்ணு கோபனுக்குப் பின் அவன் மகன் பட்டம் பெறாமல் நந்திவர்மன் பட்டம் பெற்றான் என்பதால் பரம்பரை மாறி பங்காளிகள் மாறிமாறித் தேவைக் கேற்றபடி அரசு கட்டில் ஏறினர் எனக்கோடலே பொருந்துவதாகும். நந்தி வர்மனுக்குப் பிறகு சிம்ம விஷ்ணுவின் (கி.பி. 575-615) தந்தையான மூன்றாம் சிம்ம வர்மன் பட்டம் பெற்றான் என்பது தெரிகிறது.

(6) இளவரசன் - விஷ்ணுகோப வர்மன் பல்லவர் மாகாணம் ஒன்றைப் பிரதிநிதியாக இருந்து ஆண்டிருக்கலாம். அதன் தலைநகரம் பலக்கடவாக இருக்கலாம். அதிலிருந்து தான் உருவப்பள்ளி - பட்டயம் வெளியிடப்பட்டது.[1]

இதுகாறும் கூறி வந்த காலவரையை (நாம் பார்த்த அளவு) அரசர் பெயருடன் இங்குக் குறித்து மேற்சொல்வோம்:


  1. D. Sircar’s “Successors of the Satavahanas’ p.205.