பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/81

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
61
இடைக்காலப் பல்லவர்


குமார விஷ்ணு I (கி. பி. 340-350)
கந்த வர்மன் I (கி. பி. 350-375)
வீரகூர்ச்ச வர்மன் கி. பி. 375-400)
கந்தர் வர்மன் I (கி.பி. 400-436)
(இவன் மக்கள் மூவர்)
சிம்ம வர்மன் I
(கி.பி. 436-450)
இளவரசன் விஷ்ணுகோபன் குமார விஷ்ணு II
கந்த வர்மன் III
(கி.பி. 450-475)
சிம்ம வர்மன் II புத்த வர்மன்
நந்தி வர்மன் I
(கி.பி. 525-530)
விஷ்ணுகோபன் குமார விஷ்ணு III
சிம்மவர்மன் III
(கி.பி. 550-575)
சிம்மவிஷ்ணு (கி.பி. 575-615)

குழப்பமான காலம்

இத்தகைய குழப்பங்கட்கெல்லாம் என்ன காரணம்? “இந்தக்காலம் பல்லவர் வரலாற்றில் குழப்பமான காலமாகும். பல்லவர் வடக்கிலும் தெற்கிலும் போரிட வேண்டியவர் ஆயினர். உள் நாட்டிலும் குழப்பம் இருந்திருத்தல் வேண்டும். இந்தக் காலத்திலேதான் கதம்பர் ஆட்சி தோன்றியது. கங்கர் ஒருபுறம் தலையெடுக்கலாயினர். தமிழகத்தில் நிலையாக இருந்த முடியுடைச் சோழ பாண்டியரை விரட்டி நாட்டைக் கைப்பற்றிக் பல்லவரையும் எதிர்த்துப் போர் செய்து கொண்டிருந்த களப்பிரர் குழப்பத்தால் இடைக்காலப் பல்லவர் தென்பகுதியில் அல்லலுற்றனர். மேலும், சமுத்திர குப்தன் படையெடுப்பால் பல்லவர் நாடும் அரசும் குழப்பமுற்றன.[1] அந்த இழிநிலையில் கதம்பர் பல்லவரைத்தாக்கிப்போர் விளைக்கலாயினர்.[2]


  1. Dr. S.K. Aiyangar’s int. to “The Pallavas of Kanchi’ by R.Gopalan. pp. 19-21.
  2. Morae’s “The Kadambakula,’ p.26.