பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/89

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
69
இடைக்காலப் பல்லவர்


‘ஹல்சி’ பட்டயம் பகர்கின்றது. ‘பல்லவ அரசனான கந்தர்வர்மனால் நான் அரசு கட்டில் ஏறினேன்’ என்று கங்க அரசனான இரண்டாம் மாதவன் குறித்துள்ளான். இவற்றை நோக்க, உண்மை வெளியா கின்றது. அஃதாவது, அரசனாக இருந்த கங்க அரசனை மிருகேச வர்மன் வென்றான். இதனை அறிந்த பல்லவனான கந்தவர்மன் விரைந்து சென்று போரிட்டுக்கதம்பனை வென்று, தன் நண்பனான இரண்டாம் மாதவனை மீட்டும் அரசன் ஆக்கினான்’ என்பது.

இவன் பங்காளியான விஷ்ணுவர்மன் இவனுக்கு மாறாகக் காஞ்சிப் பல்லவனைச் சரண் அடைந்தான். அதனாற் போர் மூண்டது. இரவிவர்மன்தன் பங்காளியுடனும் பல்லவனுடனும் போரிட்டான்.[1]

(4) திருப்பர்வதத்தை ஆண்ட கதம்ப மரபினருள் முதல்வன் முதலாம் கிருஷ்ணவர்மன். அவன் காகுந்த வர்மன் மகனாவன். அவன் காலம் கி.பி. 475-480 ஆகும். அவன் அக்காலப் பல்லவ அரசனிடம் படுதோல்வி அடைந்தான் என்று கல்வெட்டே கூறுகிறது. அக்காலப் பல்லவன் இரண்டாம் சிம்மவர்மனாக இருக்கலாம்.[2]

(5) கி.பி. 500 முதல் 535 வரை கதம்ப அரசனாக இருந்தவன் மிருகேச வர்மனின் மகனான இரவி வர்மன் என்பவன். இவன், ‘காஞ்சி அரசனான சண்ட தண்டனை அழித்தான்’ என்று ‘ஹல்சி’ பட்டயம் பகர்கின்றது.[3] இவன் காலத்தில் ஏறத்தாழக் காஞ்சி அரசனாக இருந்தவன் (முதலாம் நந்தி வர்மனுக்கு முற்பட்ட) விஷ்ணு கோபவர்மன் ஆவன்.

முடிவு

இந்த இரவி வர்மனுக்குப் பிறகு கதம்ப அரசர் எவரும் தாம் பல்லவரை வென்றதாகக் குறிக்கவில்லை. இதற்குக் காரணம், பின்


  1. Moraes’s “Kadamba kula,’ pp.39-40.
  2. Ibid.p.33
  3. Ind Ant vol VI p.24: முதலாம் பரமேசுவர வர்மன் தன்னை ‘உக்கிரதண்டன்” எனக் கூறிக்கொள்ளல் இங்கு நினைவு கூர்தற்குரியது.