பக்கம்:பள்ளிக்குச் சென்ற சிட்டுக்குருவிகள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8


 போல் நின்றுகொண்டிருந்தன. அந்தச் சின்னக் குழந்தைகள் இரண்டு கைகளையும் ஒரே நேரத்தில் தலைக்குமேல் தூக்கியும், எதிரில் நீட்டியும், பக்கத்தில் விரித்தும், குனிந்தும், நிமிர்ந்தும் உடற்பயிற்சி செய்து கொண்டிருந் தார்கள்.

வரிசை வரிசையாக அவர்கள் நின்றதும், ஒரே மாதிரியாகக் கைகால்களை அசைத்ததும், ஒரே வரிசையாகத் தொடர்வண்டி போல் ஓடியதும், பூக்கோலம் இட்டதுபோல் வட்டமாகவும், வளைந்தும் நின்றதும் மரத்தின் மேல் இருந்து பார்க்கும் பொழுது அழகழகாய் இருந்தது.

இத்தப் பள்ளிக் கூடத்தில் எப்படியாவது தன் சிட்டுக் குஞ்சுகளைச் சேர்த்து விட வேண்டும் என்று அம்மாச் சிட்டுக்கு ஆசையாக இருந்தது.

நாள்தோறும் அந்த அம்மாச் சிட்டு இரை தேடப் பள்ளிக் கூடத்தின் வழியாகப் பறந்து போகும் போதெல்லாம் இந்த ஆசை உண்டாகும.