பக்கம்:பள்ளிக்குச் சென்ற சிட்டுக்குருவிகள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

19


அவள் கதறிக் கதறி அழுதாள்; உந்து புறப்பட்டுவிட்டது.

அரச மரத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிட்டுக்கள் இதைப்பார்த்தன.

உடனே, விருட்டென்று பறந்தன. அந்த உந்து ஓட்டுபவனை மாறிமாறி முகத்தில் கொத்தின. அவன் பயந்து உந்தை நிறுத்தி விட்டான். உள்ளே சிறுமி கதறிக்கதறி அழுது கொண்டிருந்தாள்.

அவளை அடித்து அவள் அணிந்திருந்த சங்கிலி, தோடு, மோதிரம், ஆகியவற்றை இரண்டுபேர் கழற்றிக் கொண்டிருந்தார்கள்.

இரண்டு சிட்டுக்களும் அவர்கள் முகத்தைக் கொத்தின. படபடவென்று சிறகடித்து அவர்கள் கண்ணில் தூசி பறக்கச் செய்தன. அவர்கள் சிட்டுக்களின் தாக்குதலால் , திணறிக் கொண்டிருக்கும் பொழுது, சிறுமி உந்திலிருந்து இறங்கி ஓடிவிட்டாள்.

அதற்குள், சிறுமியின் கூக்குரல் கேட்டு ஓடிவந்த பொதுமக்கள் உந்தில் வந்த அந்தத் திருடர்களை அடித்து உதைத்து அனுப்பினார்கள்.