பக்கம்:பள்ளிக்குச் சென்ற சிட்டுக்குருவிகள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

25

-யின் துன்பத்தைப் பற்றி அந்தக் கிழவனும் நினைப்பதில்லை; அவன் நன்றிக்குப் பாத்திரமான அந்தக் கடவுளும் நினைப்பதில்லை. தங்கள் எதிர் காலத்தைத் தெரிந்து கொண்டு போகும் எந்த மனிதர்களும் நினைத்துப் பார்ப்பதில்லை.



அந்தச் சிட்டுக்குருவி ஒருநாள் கடற்கரையோரத்தில் யாரோ சிதறிவிட்டுச் சென்ற சுண்டல் கடலையைக் கொத்திக் கொண்டிருந்தது. அப்போது அத்துடன் பத்துப்பதினைந்து சிட்டுக் குருவிகள் இருந்தன. அத்தனை குருவிகளும் ஆளுக்கொரு கடலையைக் கொத்தித் தின்று கொண்டிருந்தன. அப்போது இந்தக் கிழவன், சற்றுத் தொலைவிலிருந்து கவண் வீசியிருக்கிறான். கவண் உருண்டை அந்தச் சிட்டுக் குருவியின் மீது பொட்டென்று வந்து அடித்தது. அந்தச் சிட்டுக்குருவி அந்த வலுவான அடியைத் தாங்க மாட்டாமல் தரையில் மயங்கி விழுந்தது. மற்ற சிட்டுக் குருவிகள் பறந்தோடி விட்டன. அந்தக் கிழவன் ஓடி வந்து, மயங்கிக் கிடந்த சிட்டுக் குருவியைத் தூக்கிக் கொண்டான். வீட்டுக்குக் கொண்டு சென்றதும்-