பக்கம்:பள்ளிக்குச் சென்ற சிட்டுக்குருவிகள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

அதன் இறக்கைகளைக் கத்தரித்து விட்டான். காலில் ஒரு நூலைக் கட்டி சன்னலில் கட்டி விட்டான்.

கூட்டிலிருந்து வெளியே வந்து அட்டையைக் கொத்தப் பழக்கிக் கொடுத்தான். ஆறு மாதமாகச் சிட்டுக் குருவி வேதனையோடு இந்த வேலையைச் செய்து வருகிறது. அதன் எதிர்காலமே இருண்டு தோன்றியது.

இந்தக் கிழவனிடமிருந்து எப்படித் தப்புவது என்று அதற்குப் புரியவே இல்லை. சில முறை வெளியே வந்தபோது, அது பறக்க முயன்றது. இறக்கை கத்திரித்திருந்ததால் அதனால் பறக்க முடியவில்லை.

சில சமயம் தத்தித் தத்தி ஓட முயன்றது.

கிழவன்,

“என் பிழைப்பில் மண்ணைப் போட்டு விட்டு ஓடப் பார்க்கிறாயா?” என்று கூறிப் பிடித்துக் கூட்டுக்குள் போட்டுவிட்டான்.

தப்ப வழி தெரியாமல் அந்தச் சின்னச்சிட்டு தத்தளித்துக் கொண்டிருந்தது.

கிழவன் அதன் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ளவில்லை. தன்நண்பர்களிடம் “கடவுள்-