பக்கம்:பள்ளிக்குச் சென்ற சிட்டுக்குருவிகள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

மரத்தடியை நோக்கிப் பூனைபோல் மெதுவாக நடந்து வந்தான். ஓசைப் படாமல் கூட்டுக்கதவைத் திறந்தான். சிட்டுக்குருவி வெளியில் வந்தது. அட்டை ஒன்றைக் கொத்தி எடுத்தது. சிறுவன் அந்த அட்டையை எடுத்தான். பிரித்துப் பார்த்தான்.

படித்துப் பார்ப்பதற்குள் கிழவன்விழித்துக் கொண்டால் என்ன செய்வது என்று நினைத்தான். அட்டையைத் துாக்கிக்கொண்டு ஓசைப்படாமல் நடந்து சென்றான். சிறிது தொலைவு சென்றபின் ஓடி விட்டான்.

சிட்டுக் குருவி மீண்டும் கூண்டுக்குள் சென்றது.

திரும்பிப் பார்த்தது. திறந்த கதவு திறந்த படி இருந்தது.

கிழவன் தூங்கிக் கொண்டிருந்தான்.

தப்பி ஓட இந்த நேரம்தான் நல்ல நேரம் என்று தோன்றியது. இது போல் வேறொரு நேரம் கிடைக்காது என்று தோன்றியது.

சட்டென்று வெளியில் வந்தது.

பறக்க முயன்றது. இறக்கை கத்திரித்திருந்ததால் பறக்க முடியவில்லை.