பக்கம்:பள்ளிக்குச் சென்ற சிட்டுக்குருவிகள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

33

-யறியாத அந்தச் சிட்டு தன்னால் பறக்க முடியாதென்று நினைத்துக் கொண்டிருந்தது.

பாம்புக்குப் பயந்து பறக்க முயன்றபோது அது உண்மையிலேயே பறந்து விட்டது.

“எனக்குப் பறக்க வந்து விட்டது” என்று அது கூக்குரல் இட்டது.

இனிமேல் அது யாருக்கும் பயப்படத் தேவையில்லை; ஏதாவது ஆபத்து என்றால் அதனால் உடனே பறக்க முடியும்; மரத்தின் மேல் ஏறிக் கொள்ள முடியும்.

நன்றாகப் பறக்க முடிந்த பிறகு ஒரு நாள் அந்தச் சிட்டுக் குருவி இராயபுரம் மாதா கோயில் பக்கம் பறந்து சென்றது. அந்த வேப்ப மரத்தின் அருகில் சென்றது.

அங்கே கிழவன் சோதிடம் பார்த்துக் கொண்டிருந்தான். அதன் கூட்டில் வேறொரு சிட்டுக் குருவி யிருந்தது.

அது சோதிட அட்டையைக் கொத்தி எடுத்துக் கொடுத்தது. கிழவன் படித்துக் காட்டி இருபத்தைத்து காசு வாங்கிக் கொண்டிருந்தான்.

–3–