பக்கம்:பள்ளிக்குச் சென்ற சிட்டுக்குருவிகள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

41


“குழந்தைகளே, எல்லாரிடமும் அன்பு செலுத்துங்கள். நல்லவர்களுக்கு உதவி செய்யுங்கள்” என்று கூறினாள் கடல் தேவதை.

‘அப்படியே செய்கிறோம் அம்மா! உங்களை மறுபடி எங்கே பார்க்கலாம்?’ என்று சிட்டுக் குருவிகள் கேட்டன.

'குழந்தைகளே, நீங்கள் என்னைப் பார்க்க வேண்டும் என்று நினைத்தால், கடற்கரைக்குப் பறந்து வாருங்கள். கரையோரத்தில் நின்று கொண்டு 'அம்மா!' என்று அழைத்தால் நான் ஓடோடி வருவேன்’ என்று கூறினாள் கடல் தேவதை. குருவிகள் தேவதையிடம், போய் வருகிறோம் என்று சொல்லிக் கொண்டு தங்கள் கூட்டுக்குத் திரும்பின.

அந்தச் சிட்டுக்குருவிகள் இரண்டும் தூக்கம் வரும்வரை தேவதையைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தன. அவளுடைய அழகைப் பற்றியும், இனிய மொழிகளைப் பற்றியும், அன்பான பார்வையைப்பற்றியும், அவள் சொன்ன நல்ல கருத்தைப் பற்றியும் பேசிக் கொண்டே தூங்கின.

தூக்கத்தில் கூட அந்த அழகான தேவதை நேரில் வந்து அவற்றோடு அன்பாகப்