பக்கம்:பள்ளிக்குச் சென்ற சிட்டுக்குருவிகள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

45

விருந்து வைக்கிறேன்!’ என்று பல்லைக் கடித்துக்கொண்டே பேசினான் அந்த மனிதன்.

சிட்டுக் குருவிகளுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. அந்தக் கொடிய திருடனிடமிருந்து எப்படித் தப்பிப் பிழைப்பதென்றும் புரியவில்லை.

ஒன்ன்ற யொன்று பார்த்து விழித்தன.

கடற்கரை ஓரத்தில் ஒரு குடிசையை நோக்கி அந்த மனிதன் விரைந்தான். அந்தக் குடிசையின் முன்னே ஒரு முரட்டுப் பூனை உட்கார்ந்திருந்தது.

திருடன் கையில் இருந்த வலைக்குள் சிட்டுக் குருவிகளைப் பார்த்தவுடன் அந்தப் பூனை உடனே கடித்துத் தின்னப் பாய்ந்து வந்தது.

'பூனைக் கண்ணா! கொஞ்சம் பொறுமையாயிரு. வலையைவிட்டு எடுத்து விடுகிறேன். பிறகு நீ லபக்கென்று பிடித்துக் கொள்ளலாம்' என்று கூறிச் சிட்டுக் குருவி ஒன்றை வெளியில் எடுத்தான், திருடன்.

பூனை அதைக் கௌவிப் பிடிக்கப் பாய்ந்தது.