பக்கம்:பள்ளிக்குச் சென்ற சிட்டுக்குருவிகள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

இரண்டு கைகளாலும் நவதானிய மணிகளை எங்கும் கொட்டினாள்.

பறவைக் கூட்டங்களுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை இவ்வளவு அவ்வளவு என்று சொல்ல முடியாது.

எல்லாப் பறவைகளும் கடலம்மாவை வணங்கின. அவள் போட்ட தானிய மணிகளைத் தேடிப் பொறுக்கித் தின்றன. மகிழ்ச்சியுடன் அவ்வப்போது அவளை நிமிர்ந்து பார்த்தன. கடலம்மா எல்லாப் பறவைகளையும் வாழ்த்தினாள். சிறுவர்களை நோக்கிப்பறந்தாள்.

‘சிறுவர்களே, காக்கை குருவியெல்லாம் உங்கள் அன்புக்குரிய பறவைகள். அவைகளை நீங்கள் ஆதரித்து வளர்க்க வேண்டும். கல்லால் அடிப்பதோ, தொல்லை கொடுப்பதோ கூடாது. அவற்றோடு சேர்ந்து விளையாடலாம். துன்புறுத்தக் கூடாது. உலகில் எல்லாரும் மகிழ்ச்சியாக இருக்க இதுவே வழி!’ என்று கடலம்மா கூறினாள்.

உடனே சிறுவர்கள் 'தெரியாமல் செய்து விட்டோம் தாயே. மன்னிக்க வேண்டும்.