பக்கம்:பள்ளிக்குச் சென்ற சிட்டுக்குருவிகள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

55


உடனே காவல் வீரர்கள், சிட்டுக் குருவிகளை விரட்டத் தொடங்கினர். சிலர் மரங்களில் ஏறி அவற்றின் கூடுகளைக் கலைத்து விட்டனர்.

சில வீரர்கள் சிட்டுக் குருவிகளின் மேல் கல்லை விட்டெறிந்தனர். சிலர் கவண் வில்லினால் களிமண் உருண்டைகளை யடித்தனர். சிலர் வில்லை வளைத்து அம்பெய்தனர். இதில் சில சிட்டுக் குருவிகள் அடிபட்டு விழுந்து இறந்தன.

இந்த வேட்டை நடந்து கொண்டிருக்கும் போதே ஒரு சிட்டுக் குருவி வான வெளியில் பறந்து சென்றது. நேரே கொல்லி மலைக்குச் சென்றது. அங்கு ஓர் அரச மரத்தில் வீற்றிருந்த சிட்டுக் குருவியரசனிடம் நடந்த நிகழ்ச்சிகளைக் கூறியது. உடனே அந்த சிட்டுக் குருவி அரசன் படை திரட்டிக் கொண்டு பாராண்டபுரத்திற்குப் பறந்து சென்றது. பாராண்டபுரத்து அரண்மனையைச் சுற்றிலும் சிட்டுக் குருவிகளின் படையெடுப்பு.

அரண்மனை வேலைக் காரர்களால் வேலை செய்ய முடியவில்லை. தோட்ட