பக்கம்:பள்ளிக்குச் சென்ற சிட்டுக்குருவிகள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

கிறீர்கள். உங்களுக்கு என்ன குறை? தண்ணீர் கிடைக்கவில்லையா? தானியம் கிடைக்கவில்லையா? ஏன் இப்படிக் கூட்டமாக வந்து அரண்மனையைச் சூழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்?' என்று பாராண்டபுர மன்னர் கேட்டார்.

‘எங்கள் தலைவன் வருகிறார் சிட்டரசன் வருகிறார்! உங்களுக்கு அவர் பதில் சொல்லு வார்’ என்று ஐந்தாறு சிட்டுக் குருவிகள் கத்தின. அப்போது தொலைவில் வானவெளியில் ஒரு பூம்பல்லக்கு மிதந்து வருதது தெரிந்தது.

பாராண்டபுர மன்னர் நிமிர்ந்து பார்த்தார்.

கொடிகளால் பின்னிய ஒரு பூம்பல்லக்கு வானில் மிதந்து வருவதுபோல் தோன்றியது. உண்மையில் அது வானில் தானாக மிதந்து வரவில்லை. ஐம்பது சிட்டுக் குருவிகள் தங்கள் அலகுகளால் பற்றிக் கொண்டு ஒரே சீராகப் பறந்து வந்தன.

சாமந்திப் பூக்களால் ஆகிய அந்த மஞ்சள் பல்லக்கில் ரோஜாப் பூவினால் ஒரு உயர்ந்த பீடம் அமைக்கப் பட்டிருந்தது. அந்தப் பீடத்தின் மீது மிகுந்த பெருமிதத்தோடு ஒரு