பக்கம்:பள்ளிக்குச் சென்ற சிட்டுக்குருவிகள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62


'சிட்டரசனே, இனிமேல் நான் மட்டும் அல்ல, என் ஆட்சியில் உள்ள யாரும் இவ்வாறு நடந்து கொள்ளாமல் பார்த்துக் கொள்கிறேன். இறைவன் படைப்பில் எல்லா உயிர்களும் ஒரு மாதிரி தான் என்ற உண்மையை நான் மறக்க மாட்டேன். நீயும், உன் குருவிக் குலமும் என்னை மன்னிக்க வேண்டுகிறேன். என் அன்பின் அடையாளமாக, இன்று அரண்மனைக் களஞ்சியத்தில் உள்ள தானியங்களை உங்களுக்கு வாரி வழங்க விரும்புகிறேன். எல்லோரும் விருந்துண்டு மகிழ்ச்சியாக உங்கள் கூடுகளுக்குத் திரும்ப வேண்டுகிறேன்!' என்றார்.

உடனே எல்லாச் சிட்டுகளும் 'பாராண்ட புரமன்னர் வாழ்க!' என்று கத்தின.

தானிய விருந்து உண்ட பின் தத்தம் கூடுகளுக்கு மகிழ்ச்சியோடுபறந்து சென்றன. சிட்டரசனும் தன் பூம்பல்லக்கில் ஏறிக்கொல்லி மலைக்குத் திரும்பியது.