பக்கம்:பள்ளிக்குச் சென்ற சிட்டுக்குருவிகள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



5

சக்தி பெற்ற
சிட்டுக் குருவி

ஒரு புல்வெளி.

பசு ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது.

அந்த வழியாக ஒரு சிட்டுக் குருவி பறந்து சென்றது.

சிறிது நேரம் பசுவின் முதுகில் உட்கார்ந்து இளைப்பாறிச் செல்லலாம் என்று சிட்டுக் குருவி நினைத்தது.

உடனே கீழே இறங்கிப் பசுவின் முதுகில் குந்தியது.

முதுகில் ஏதோ குத்துவது போல் உணர்ந்த பசு வாலைத் தூக்கி அடித்தது.

நல்ல அடி!