பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

viii ஆய்வறிஞர்கள் எடுத்துச் சொல்லவேண்டும் என்பதற்கு இக்கட்டுரை ஒர் வழிகாட்டியாக உள்ளது. தமிழகத்தில் வழங்கும் இராமாயணக் கதை வைதிகத்தை அடிப்படையாகக்கொண்டது. பெளத்த ராமாயணம் ஜைன ராமாயணம் வட நாட்டிலும் உலகின் வேறு பல நாடுகளிலும் பரவி இருப்பவை. ஆனால் தமிழகத்தில் பக்தி இயக்கத்தின் பின் சீதை, அனுமன், இராமன் ஆகியோர் வைதிக அடிப்படையில் பெற்றிருந்த செல்வாக்கைக் கிராம மக்களிடையே அவர்கள் பாராட்டப்பெற்ற தகைமையை எடுத்துச்சொல்வது பாராட்டுக்குரியது. இராமாயணம், மகாபாரதம் பற்றிய ஆய்வுகள் பெருகிய வண்ணம் உள்ளன. குறிப்பாக அண்மைக்கால ஆய்வுகள் ஆரியரல்லாத தொல்பழங்குடி மக்களிடை வழக்கில் நாட்டார் கதைகள் அடிப்படையில் அவை எழுந்தவை. நாளடைவில், காலப்போக்கில் ஆரிய மயமாக்கப்பட்டன எனக் காட்ட முயல்கின்றன. பேராசிரியர் நா.வானமாமலை அவர்களின் கட்டுரைத் தொகுப்பினைத் தமிழ் மக்களுக்கு அளிப்பதில் என். சி. பி. எச். பெருமகிழ்ச்சியடைகிறது. அவர் என். சி. பி. எச். ஆசிரியர் குழுவில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆர். பார்த்தசாரதி