பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தஞ்சைக் கோயிலின் செலவும் - நில வருவாயும் 0.0 தஞ்சைப் பெருவுடையார் கோயில் ராஜராஜனுடைய தலைநகரில், அவனுடைய பேரரசின் வெற்றிகளையும், பெருமையையும், சோழநாட்டின் பண்பாட்டின் சிறப்பையும், அரச குடும்பத்தின் பக்தியையும் பறைசாற்றுவதற்காகக் கட்டப்பெற்றது. இது அக்காலத்தின் சிற்பச் சிறப்பின் சிகரமாகவும், கலை வளர்ச்சியின் கோபுரக் கலசமாகவும், நிறுவன அமைப்புத்திறனின் வெற்றியாகவும் விளங்குகிறது. ராஜராஜன் தன் பேரரசின் செல்வத்தில் ஒரு பகுதியை இக்கோயிலைக் கட்டவும், அதன் பூசனைகளையும், விழாக்களையும், கலை நிகழ்ச்சிகளையும் நடத்துவதற்குச் செலவிட்டான். இதற்கென முழுநேர தேவகன்மிகளையும்,கலைவாணர்களையும்,தொழிலாளர்களையும் நியமித்து ஊதியமும் நிவந்தங்களும் அளித்தான். 0.1 இக்கோயிலில் எழுநூறுக்கு மேற்பட்ட ஊழியர்கள் நிரந்தரமாகப் பணிபுரிந்தனர். கோயில் பூசனைகளுக்கும், திருவிழாக்களுக்கும் ஏராளமான செல்வம் தேவைப்பட்டது. இச்செலவுகள் கோயில் கட்டி முடித்து பத்து ஆண்டுகளில் மிகவும் அதிகரித்துவிட்டன. எத்தகைய செலவுகள் இப்பத்து ஆண்டுகளில் ஏற்பட்டன? அதற்குரிய வருவாயை அரசன் எப்படித் தேடித் தந்தான்? என்பதை அறிவது ஆர்வம் ஊட்டும் ஆராய்ச்சியாகும். அதனை இப்பொழுது மேற்கொள்வோம். 1.0 தஞ்சைப் பெரிய கோயிலில் ராஜராஜனுடைய காலத்திலேயே, மிகப் பெரிய அளவில் பலவகைக் கோயில் பணியாளர்களும் பணிபுரிந்தனர். அப்பணியாளர்கள் யார் யார் எவ்வகையான பணி செய்தனர், அவர்களது எண்ணிக்கை எத்தனை என்பதை பெரிய