பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை சமூகவியல், மானுடவியல் ஆராய்ச்சி தமிழுக்குப் புதிது, அதிலும் மார்க்சீய முறையியலைப் பயன்படுத்தி ஆராய்ச்சி செய்வது இதுவே முதல் தடவை. முதல் மூன்று கட்டுரைகள் ஆராய்ச்சியில் வெளிவந்தவை. இவை உலகம் படைக்கப்பட்டவிதம் பற்றி வரலாற்றுமுற்கால மக்களும், தற்கால இனக்குழு மக்களும் புனைந்துரைத்த புனைகதைகள். இவை விஞ்ஞான விளக்கங்களல்ல. கற்பனைப் புனை கதைகளே. இக்கதைகள் கூட, சமூக நிலைமைகளால் கட்டுப்படுத்தப்பட்டு கதைகள் எழுந்த சமூக நிலைமைகளை இப்புனைகதைகள் பிரதிபலித்தன. புனை assing, "The fantasic reflection of the society that produced them." என்று மார்க்ஸ் கூறினார். எனவே கற்பனைச் சிறகுகளை அகற்றிவிட்டுப் பார்த்தால் உண்மையின் கரு தெரியும். இக்கதைகள் பலவற்றை நான் தார்வாரில் முதுநிலை ஆய்வாளனாகவும், கெளரவப் பேராசிரியனாகவும் பணியாற்றிய ஒராண்டுக் காலத்தில் படித்தேன். Eliades Glårö#5 From the Primitive to Zen stairs) Bissolosh, R.G. கிரேவ்ஸ் எழுதிய Greek Myth என்ற நூலிலும் ஆசிரியர் பெயர் Qāfilm; Babylonian Myths stairg, BITsolgh, Dictionary of Myth and Legend என்ற நூலிலும், ஒவ்வொரு தேசத்தின் பண்டையப் புனை கதைகள், புராணக் கதை இவற்றை 13 பகுதிகளாக வெளியிட்டிருக்கும் Hamlyn Mythology Series-gugih, uģuso uģistíflsmē snusir@ வால்யூம்களையும் படித்தேன். இவற்றில் இருந்து உலகப் படைப்பு பற்றி பண்டைய சமுதாயங்களில் வாழ்ந்த வரலாற்று முற்கால மக்களும் தற்காலத்தில் அதே சமுதாய நிலைமைகளில் வாழ்கிற இனக்குழு மக்களும் ஒரே விதமாகச் சிந்திப்பதும் சமுதாயங்களின் வளர்ச்சி வேறுபாடுகளுக்கு ஏற்ப குறிப்பிட்ட புனைகதை வகைகளும் தோன்றியுள்ளன என்ற முடிவுக்கு வந்தேன். அந்த ஆராய்ச்சியைத் தான் “உலகப் படைப்புக் கதை மூலகங்கள் - ஓர் ஆய்வு” என்ற