பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ. நா. வானமாமலை . . . . . 岑 ● 哆 > s a ö ※ & 蛤 Φ & B αν ο " ty φ * < & ü 115 ಇಆ காணிக்கடன் ராஜகேஸ்ரியோடு ஒக்கும் ஆடவல்லான் என்னும் மரக்காலால் அடக்கக்கடவ நெல்லு. . . . .பொன் நூற்றொன்பதின் கழஞ்சே ஒன்பது மஞ்சாடியும்.” இவ்வூரில் முன் நிலவுடைமையாளரை நீக்கி அவ்வுடையார் பெற்ற காராண்மையும் மீயாட்சியும் உள்ளடங்க காணிக்கடன் நிச்சயித்து, தேவதானத்து பயிரிடுங்குடியென்ற நிலைமைக்கு அவர்களை மாற்றப்பட்டதை இக்கல்வெட்டு தெளிவாக்குகிறது. இம்மாதிரியே தெளிவாக முன்னுடையாரை மாற்றி என்ற வாசகத்தோடு, தொடங்கும் கல்வெட்டுக்கள் 12 அவற்றுள் ஏழு ஊர்களின் பெயர்கள் தெளிவாக அறியப்படுகிறது. அவை பேராயூர், அண்டக்குடி, சூலூர், குசஆர், மாப்பிசும் கொட்டியாரம், நட்டுவிட்டி, மாசார் ஆகியவை. இவற்றுள் உழவர்க்கே உடமையாயிருந்த வெள்ளான் வகையே மிகுதி. பன்னிரண்டு கல்வெட்டுக்களில் இரண்டு பிரம்மதேயங்களைப் பற்றியது. பத்து வெள்ளான் வகை கிராமங்கள். இவையிரண்டிலும், காராண்மை மீயாட்சி உரிமைகளைக் கோயிலுக்கு உரிமை மாற்றங்கள் செய்ததை இவ்வாணைகள் காட்டுகின்றன.” அவ்விரண்டு பிரமதேயங்களைப் பற்றிய கல்வெட்டுகள் வருமாறு: “நுளம்பபாடியான நிகரிலிச் சோழப் பாடி பறிவை நாட்டுப் பிரமதேயம் குசஆர். இறைகட்டின காணிக்கடன் ராஜகேசரியோடொக்கும் ஆடவல்லானென்னும் மரக்காலால் அளக்கக்கடவ நெல்லு ஒன்பதினாயிரத்துபத்து கலன்." “பாடியான நிகரிலிச் சோழ பாடிப்பறிவை நாட்டுத் தேவதான பிரமதேயம் கூடலூர் இறைகட்டின காணிக்கடன் ராஜகேலரியோடொக்கும் ஆடவல்லானென்னும் மரக்காலால் அளக்கக்கடவ நெல்லு பன்னிராயிரத்து இரு கலனே.” இரு பிரமதேயங்களிலிருந்து இவ்வாணைமூலம் பெறப்பட்ட நெல்: குசவூர் - 9.010 கலம். கூடலூர் 1,202 கலம். வெள்ளான் வகை நிலங்களிலிருந்து இவ்வாணை மூலம் கிடைத்த நெல்: (1)123(2)3,164(3)10 (4, 66 (5)459 கலங்கள் வெள்ளான் வகை நிலங்களுக்கு காணிக்கடன் பொன்னாக நிச்சயிக்கப்பட்டதும் உண்டு.