பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盏 * b * 4 w is : s is w * 8 * 8 & " பழங்கதைகளும் பழமொழிகளும் ಇಣ 8.1 இம்மாற்றங்களால் உடைமையாளர்கள் பயிரிடும் குடிகளாக மாற்றப்பட்டனர். அவர்கள் காணிக்கடனை ஊரார் (ஊர்ச்சபை) மூலம் செலுத்த வேண்டியதாயிற்று. ஆயினும் நிலங்களில் பயிரிடும் உரிமை அவர்களுக்கு இருந்தது. பயிரிடும் உழவர்களை அவர்கள் கூலிக்கு அமர்த்திக் கொண்டிருக்க வேண்டும். 8.2 இவை தவிர ஒரே ஒரு கல்வெட்டு உள்ளூர் கோயில் நிலத்தை அபகரித்து வெள்ளான் வகையாகப் பயிரிட்டுவரும் நிலத்திற்கு இறைகட்டி தஞ்சைக் கோயிலுக்கு நெல் அளக்க ஆணையிட்டதைக் குறிப்பிடுகிறது: “இந்நாட்டுத் திருத்தேவன் குடி உள்ளுர் கடதேவர்க்கு நீக்கி ஏற அபகரித்து உண்டு வருகின்ற நிலமென்று வேறு முதலாக்கி வெள்ளான் வகையால் வருகின்ற நிலம் வெள்ளான் வகையில் முதல் தவிர்த்து இவ்வூர் ஊர்நத்தமும் சுடுகாடு முள்ளிட்டு இறையிலியாக நீக்கின நிலன் பொதுவே அனுபவிக்கக் கடவதாக நீக்கல் நீக்கி அளந்தபடி நிலம் இருபத்தொன்பதே காலே முக்காணி முந்திரிகைக் கீழ் நான்குமாக்காணி அரைக்காணிக் கீழ் காலே அரைமாவினால் இறைகட்டின காணிக்கடன் ராஜகேலரியோடு ஒக்கும் ஆடவல்லானென்னும் மரக்காலால் அளக்கக்கடவ நெல் இரண்டாயிரத்துத் தொளாயிரத்து. . . ங்கலனே இருதுTணி ஒருநாழி.” இந் நிலம் முதலில் கடதேவர்க்கு உடைமையாயிருந்தது. இதனை யாரோ அபகரித்து உண்டு வந்தார்கள். அதனை ஊரார் வெள்ளான் வகையாக்கி பொதுவாகவே அனுபவித்து வந்தார்கள். இவ்வாணை அவ்வுரிமையை நீக்கி இறையிலி நீங்கப் பயிரிடுநிலம் இருபத்தொன்பதேகால் சில்லறை என்று இறைகட்டி 2,900-க்கு அதிகமான கலம் நெல்லளக்க ஆணையிட்டது. இது வேலி-கலம் சராசரிக் காணிக்கு ஒத்திருப்பதைக் காணலாம். 9.0 இவ்வாறெல்லாம், சோழமண்டலத்திலும் புற மண்டலங்களிலும் தேவதானங்கள், ஊர் நிலங்கள், பிரமதேயங்கள், வெள்ளான் வகை ஆகிய அனைத்து வகை நிலங்களையும் இறைகட்டின நிலங்களாக்கி,