பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- జీఱ நா. வானமாமலை . . . . . . . C C S S S S C C C C S S S S S S S S C C 117 ಇಣ அவற்றுள் முதல் ஆணையில் 18 ஊர்களுக்கும் இரண்டாவது ஆணையில் 16 ஊர்களுக்கும் மூன்றாவது ஆணையில் 12 ஊர்களுக்கும் காணிக்கடன் நிச்சயித்து வசூலிக்க ஏற்பாடு செய்து, கோயிலின் செலவுகளுக்கு வருமானம் ஏற்படுத்தித் தரப்பட்டது. நாம் கணக்கிட்ட செலவுகள் ஒதுவார், தளிச்சேரிப் பெண்டுகள், நிவந்தக்காரர் ஊதியம் மட்டும் 64,590 கலம் நெல்லாகிறது. இவ்வாணைகளின்படி கிடைக்கும் வருவாய்1:56,531கலம் நெல்லாகிறது. இது தவிர பொன்னாகவும் வருமானம் வந்தது. இதில் ஒரு பகுதி ஆபரணங்கள், கலங்கள் பிரதிமைகள் செய்யப் பயன்படுத்தப்பட்டது. நெல்லில் செலவு போக எஞ்சியது.பொன்னாக மாற்றி சேமிக்கப்பட்டது. 10.1 நாம் குறிப்பிட்ட 48 கல்வெட்டுக்களில் காணப்படும் உரிமை மாற்றங்களையும், உடைமை மாற்றங்களையும் இறுதியாகக் கவனிப்போம். இவற்றுள் குறுவாணியக்குடி நகரம், வெண்ணிநிலன் நகரம் வேனில் விடுதி பல்லவபுரம் மூன்றும் நகரத்தார் கிராமங்கள். இவை வணிகர் செல்வாக்கில் இருந்தவை. இங்கு நகரத்தார் சபைகள் தம்முள் வசூலித்தும், இக்கிராமங்கள் பொன்னால் காணிக்கடன் செலுத்தின. இங்கு நகரத்தார் சபைகள் தம்முள் வசூலித்தும், நிலங்களுக்கு இறைவிதித்து நெல் வசூலித்தும், காணிக்கடனைச் செலுத்தியிருக்க வேண்டும். இவை தவிர இரண்டு பிரமதேயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இவை பிராமணர் வாழ்ந்த கிராமங்கள். பல்லவர் ஆட்சியிலும், பாண்டியர் ஆட்சியிலும், சோழர் காலத்திற்கு முன்னரே பிரமதேயங்கள் தோன்றிவிட்டன. அவற்றில் குறிப்பிட்ட நிலங்களில் பங்கு பெறும் உரிமை பிராமணருக்கு அளிக்கப்பட்டதைக் குறிக்கும். இவ்வூதியம் அவர்கள் கடிகைகள், காலைகளில் போதிப்பதற்காகவும், கோயில் பூசைகளை மேற்பார்வை செய்யவும் அளிக்கப்பட்டது. ஆசிரியருக்கு அளிக்கப்படும் ஊதியம் சாலாபோகம் எனப்பட்டது. பிற்காலத்தில் புராணப் பிரசங்கம் செய்வோருக்கும் இப் பெயரிலேயே ஊதியம் அளிக்கப்பட்டது. ராஜராஜன் காலத்தில் பிரம்ம தேயங்களை வலுப்படுத்தினான். ஊர்நிலம் என்பது பிராமணரல்லாத உயர்சாதியினர் உழுவித்துப் பயிரிட்ட நிலம். இவர்கள் உழவர்களைக் கூலிக்கு அமர்த்திப்