பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதே 118 . . . . . . * 9 о 8 з 9 . . . . பழங்கதைகளும் பழமொழிகளும் பயிரிட்டனர். இது ஊருக்குப் பொதுவாயினும், இதில் விளையும் நெல்லில் பெரும்பங்கு காராட்சி, மீயாட்சியாக உழவுத்தொழில் செய்யாத உழுவித்துண்ணும் வேளாளருக்குக் கிடைத்தது. இவையனைத்திலும் நிலம் யாருடைய உடைமை என்பது ராஜராஜனுக்கு முந்திய காலத்தில் தெளிவாக இருக்கவில்லை. இங்கு குறிப்பிட்ட 48 சாசனங்களில் நிலவுடைமை தெளிவாக்கப்படுகிறது. இங்கு, காணிக்கடன் எல்லா வகை நிலங்களுக்கும் விதிக்கப்பட்டது. இறையிலி நிலங்கள் எவை என்பதை ஊர்தோறும் தெளிவாக்கி, மீதமுள்ள பிரமதேயம், நகரம், வெள்ளான் வகை, ஊர்நிலம், பழந்தேவதானம், அனைத்தும் காணிக்கடனுக்குட் படுத்தப்பட்டது. எனவே நிலஉடைமை இந்த 46 கிராமங்களிலும் ராஜ ராஜேச்சுரமுடைய பரமசுவாமிக்குத்தான் என்றும், காணிக்கடன், காணியுடைமைக்குரிய பாட்டம் (land rent) என்பதும் இவ்வாணைகள் தெளிவுபடுத்துகின்றன. காராட்சி, மீயாட்சி என்ற உரிமைகள், பிராம்மணருக்கும், ஊராருக்கும், சபைக்கும், வேளாளர்களுக்கும் இராஜராஜன் காலத்துக்குமுன் இந்த 46 கிராமங்களிலும் குறிப்பிட்ட நிலங்களில் இருந்து, அவ்வுரிமைகளைக் கோயிலின் காணியுடைமைக்கு உள்ளடக்கியதை ஆணைகள் குறிப்பிடுகின்றன. எனவே கோயிலின் உடைமைக்குட்பட்டு, குத்தகை உரிமையாகக் காராட்சியும், பயிரிடுவதை கோயிலுக்காக மேற்பார்வை செய்வதற்கு ஊதியமாக மீயாட்சியும் மாற்றப்பட்டது. எனவே பெரிய கோயில் சாசனங்கள் குறிப்பிடும் 46 கிராமங்களிலும் கோயிலின் நிலவுடைமை தலையாய உரிமையாக விதிக்கப்பட்டது. கிராமங்களில்,பிராம்மணரும், சபைகளும், வேளாளரும், நகரத்தாரும் கோயிலின் நிலவுடைமை மேலாதிக்கத்திற்குட்பட்டு, நிவந்தக்காரர் போல, நிலத்தின் விளைச்சலில் பங்கு பெறும் உரிமையைப் 10.2 இம்மாறுதலால் சுவாமிக்கே நிலம் என்ற கொள்கை செயல்படுத்தப்பட்டது. சுவாமியின் நிலத்தைப் பயிரிடக் கொடுத்து மேற்பார்வை செய்வோர் சபையினரும், ஊராரும் நகரத்தாரும், வேளாளரும் என்ற நிலை ஏற்பட்டது. தங்களது பழைய வருமானத்தை