பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

з « » 4 з в 4 «» з а в з «ь о 8 ° பழங்கதைகளும் பழமொழிகளும் முன் பக்கம் காட்டிய இணைப் பழமொழிகள் கருத்துக்களிலும் உவமை உருவகங்களிலும் உள்ள ஒற்றுமைக்குரிய காரணங்களை ஆராய்வோம். இதற்கு அப்பழமொழிகள் தோன்றிய வாழ்க்கைச் சூழலை அடிப்படையாகக் கொள்வோம். பழமொழி (3) தமிழில் தேவர்களின் உணவான அமிர்தத்தைக் குறிக்கிறது. தமிழ் மக்களுக்கு இந்திய இதிகாசக் கதைகளான மகாபாரதம், இராமாயணம் மூலம் தேவாகர யுத்தம் பற்றித் தெரியும். அது சாவா மருந்தென்றும், மூவாமருந்தென்றும் அவர்கள் அறிந்திருந்தார்கள். இவ்வளவு மேன்மையான பயன்பாடுள்ள அமுதம் கூட அளவுக்கதிகமானால் விஷமாகிவிடும் என்ற பழமொழியைப் படைத்தார்கள். அமுதம் குறைந்த அளவில் உட்கொண்டால் மனிதனை சிரஞ்சீவியாக்கும். இந்த விளைவுக்கு ஒரு அளவில் அதனை உண்ணவேண்டும். அளவு மீறி உண்டால் அது எதிர்மறையான விளைவுகளை உண்டாக்கும். பழமொழி இதனை எதிர்மறையான பொருளாகவே குறிப்பிடுகிறது. அதாவது சிறிய அளவில் சாவாமைக்குக் காரணமான அமுதம் பெரிய அளவில் விஷமாகிவிடும். 5-வது பழமொழியை எடுத்துக்கொள்வோம். இதன் கருத்து ஒரு வேலைக்குத்தேவையானதைவிட அதிக ஆட்கள் அவ்வேலையிலீடுபட்டால் வேலை நன்றாக நடைபெறாது என்பதாகும். இந்த வேலையைக் குறிப்பிடும் போது மலைநாட்டு திரிபுரிகள் மரச் சட்டத்தையும், மருத நாட்டு தமிழ் மக்கள் வயல் வேலையையும் குறிப்பிடுகிறார்கள். மலைநாட்டு மக்கள் தங்கள் உறைவிடங்களைக் கட்டுவதற்கு மலைகளில் கிடைக்கும் மூங்கில்களைப் பயன்படுத்துகிறார்கள். எனவே பல பழமொழிகளில் மூங்கிலின் பயன்பாட்டை அவர்கள் குறிப்பிடுகிறார்கள்; ஆனால் தமிழ் மக்கள் பண்டைக் காலம் முதல் செங்கல், மரம், இரும்பு, கண்ணாம்புச் சாந்து, கல் முதலிய கட்டிடப் பொருட்களைப் பயன்படுத்தி வந்துள்ளார்கள். எனவே உறைவிடத்தையோ அல்லது கட்டிடங்களையோ குறிப்பிடும் போது இப்பொருள்களின் பயன்பாடு பழமொழிகளின் தன்மைகளை மாற்றுகிறது. எனவே பழமொழி 5-ல் திரிபுரியில் மூங்கில் சட்டமும் தமிழில் எண்ணெய்செக்கும் தொழில் பொருட்களாக வருகின்றன. எள்