பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

്. ZYS T0YTmmYYYTT SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS 135 ஆட்டி எண்ணெய் எடுக்கும் வேலை திறமை தேவையான வேலை. ஒரு வாணியனுக்கு பத்துபேர் உதவியாகப் போனால் அவனுடைய வேலையைத்தான் கெடுப்பார்கள். அதேபோல்தான் சட்டம் செய்வதும் தேவைக்கு மேல் அதிகமான ஆட்கள் சட்டம் செய்யப்போனால் குழப்பம் தான் ஏற்படும். உவமைப்பொருள்களின் வேறுபாட்டிற்கு தமிழகத்திலும் திரிபுராவிலும் வாழ்கிற மக்களின் சமுதாய வாழ்க்கையிலும் பொருளுற்பத்தி வளர்ச்சியிலும் உள்ள வேறுபாடுகளே காரணம். 35 திரிபுரி பழமொழிகளுக்கு 32 இணைப்பழமொழிகள் தமிழில் உள்ளன. 1, 7, 9, 10, 13, 4, 19, 22, 23, 25, 27, 28, 31 ஆகிய எண்களுடைய பழமொழிகள் கருத்திலும் உருவத்திலும் மிகவும் ஒத்திருப்பதையும் இணைப் பழமொழிகளாகவே இருப்பதையும் காணலாம். உவம, உருவகப் பொருள்கள்கூட இரு மொழிப் பழமொழிகளிலும் ஒன்றாகவே உள்ளன. இப்பழமொழிகளின் கருத்தைப் பார்த்தால் இவையனைத்தும் பொதுவான நீதி அல்லது ஒழுக்கக் கருத்தாக இருப்பது தெரிகிறது. இதனால் பொதுவான மனித ஒழுக்கக் கருத்துக்களை வெளியிடும் பழமொழிகள் இவ்விரு மொழிகளிலும் இணைகளாக இருக்கின்றன. வெளியீட்டு முறைகூட ஒன்றாக இருப்பதை மேலே குறிப்பிட்டுள்ள எண்ணுள்ள பழமொழிகளின் விஷயத்தில் காண்கிறோம். இவை ஒன்றிலிருந்து மற்றொன்று தோன்றின என்று கருத மொழி ஒற்றுமையோ, மக்களிடையே பெளதீக தொடர்புகளோ பண்பாட்டுத் தொடர்புகளோ இல்லை என்பது வெளிப்படை. எனவே இதற்குக் காரணம் இக்கருத்துக்களும் பழமொழிகளும் தோன்றுகிற காலத்தில் இவ்விரு வேறு மொழிகள் பேசுகிற மக்கள் நாட்டு வாழ்க்கை (Folk life)யும், நாட்டுப் பண்பாடும் இணையாக இருந்திருக்கவேண்டும். கருத்தொற்றுமைக்கும், கருத்தை வெளியிடும் முறையில் காணப்படும் ஒற்றுமைக்கும் காரணம் வெவ்வேறு வரலாற்றுக் காலங்களில் இக்குறிப்பிட்ட கட்டங்களில் இவ்விரு மக்களின் கூட்டு வாழ்க்கையும் அவ்வாழ்க்கையின் அடிப்படையில் எழுந்த பண்பாட்டு நிலையும் சமாந்தரமாக இருந்திருக்க வேண்டும். இக்கருத்தே பல்வேறு மொழிகளில் உள்ள, பழமொழிகளில் இணையான கருத்துக்களையும் வெளியீட்டு முறைகளையும் நாம் காண்பதற்கு காரணம் என்று கூறலாம். -