பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 . . . . . . . . 碳 g g 经 邸 密 分 பழங்கதைகளும் பழமொழிகளும் இனி இவ்விரண்டு மொழிகளில் உள்ள பழமொழிகளில் ஒரே கருத்தை வேறுபட்ட முறைகளில் வெளியிடுவதைக் காண்போம். 3-வது பழமொழியை எடுத்துக்கொள்வோம். மிதமிஞ்சிய எதுவும் நல்லதல்ல என்பது அதன் கருத்து. திரிபுரிப் பழமொழியில் உருவகப் பொருளாக அதிகம் எண்ணெய் என்ற பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது. மலை வாசிகளான திரிபுரி மக்களுக்கு எண்ணெய் கிடைப்பது அபூர்வமே, இந்த அபூர்வமான பொருளை வீணாக்கக் கூடாது என்ற எண்ணம் அவர்களிடையே இருக்கும். இதனால்தான் அதிக எண்ணெயைத் தேய்த்துக் கொண்டால் தலை பளபளப்பாகி விடாது என்று அவர்களது பழமொழி கூறுகிறது. கொஞ்சம் எண்ணெயைத் தேய்த்தாலே தலைமயிர் பளபளப்பாகிவிடும்போது அதிக எண்ணெயை ஏன் தேய்க்க வேண்டும்? தமிழ்நாட்டில் எண்ணெய் எளிதில் கிடைக்கக்கூடிய ஒரு பொருள். பல விதமான தாவர விதைகளிலிருந்து தமிழ் மக்கள் எண்ணெய் பிழிந்து வந்துள்ளார்கள். ஆகவே அபூர்வமான ஒரு பொருளை உருவகப் பொருளாகக் காட்டுவதற்கு அவர்கள் எண்ணெயைத் தேர்ந்தெடுக்கவில்லை. அமுதத்தைத் தேர்ந்தெடுத்தார்கள். அது எவனுக்கும் கிடைக்காத ஒரு பொருள். இதிகாசங்களிலிருந்து அவர்கள் தெரிந்து கொண்ட ஒரு பொருள். இவ்விதமாக தொழில் வளர்ச்சி நிலை வேறுபட்டால் உருவகப் பொருள்களைத் தேர்ந்ததிலும் வேறுபாடு காணப்படுகிறது. இவ்வாறேதான் திறமையான உழைப்பு தேவைப்படும் தொழிலில் திறமையற்ற மிகப் பலர்ஈடுபட்டால் நல்ல பயன் ஏற்படாது என்ற கருத்தை இரு பழமொழிகளும் வேறுபட்ட உருவகங்களால் வெளியிடுகின்றன. இவற்றை 5-வது, 6-வது பழமொழிகளில் காணலாம். 6-வது பழமொழியில் சனல் கொதிக்க வைத்து சட்டங்கள் செய்யும்போது ஒவ்வொருவர்தான் வேலையில் ஈடுபட வேண்டும். பலர் ஈடுபட்டால் சட்டம் செய்வதற்குரிய பக்குவ நிலையில் சணல் கிடைக்காது. தவிர, இது ஆண்களுடைய வேலை. பெண்களுக்கு இவ்வேலையில் பழக்கமில்லை. பழக்கமும், திறமையும் இல்லாத வேலையில் பெண்கள் ஈடுபட்டால் வேலை பாழாகிவிடும். இந்த உருவகப் பொருள்கள் குடிசை கட்டும் தொழிலிலிருந்து பெறப்பட்டவை. தமிழ் நாட்டில் பயிர் தொழில் மிக முக்கியமானது. நடவுத் தொழில் திறமைமிக்கப் பெண்களால் செய்யப்பட வேண்டும். பழக்கமில்லாத