பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2ణి 38. . . . . . . . . . . . . . . . . பழங்கதைகளும் பழமொழிகளும் 1. ஊர் கூடி செக்குத் தள்ளினாப் போல 1 2. கண்ணுகளச் சேர்ந்து களம்பறிச்சாப் போல 1-ன் பொருள், ஊரிலுள்ள எல்லோரும் கூடி ஒருவன் ஒட்ட வேண்டிய எண்ணெய்ச் செக்கை தள்ளியது, போல - 2-ன் பொருள், பயிற்சி இல்லாத சிறு பெண்கள் களத்தில் வேலை செய்தது போல - - எண்ணெய்ச் செக்கு பயிற்சியும் அனுபவமுள்ள வாணியனால் தள்ளப்படும். அனுபவமில்லாத முப்பது பேர் சேர்ந்தாலும் அந்த வேலையை அவனைப் போலச் செய்ய முடியாது. அதிக எண்ணிக்கை இத்தொழிலைக் கெடுத்துவிடும். பெண்கள் நாற்று நடவோ, களை பறிக்கவோ தேவையான உழைப்பில் ஈடுபடுகிறார்கள். அனுபவமுள்ளவர்கள் வேலை செய்தால்தான் வேலை விரைவாக நடக்கும். நாலைந்து அனுபவமுள்ள பெண்களுக்குப் பதிலாக இருபது சிறுமியரை இவ்வேலைகட்கு அனுப்பினால் அவர்கள் வேலையைச் செய்யாமல் பாடியும், வம்பளந்தும், விளையாடியும் நேரம்போக்குவ்ார்கள்; நாள் முடிவில் ஐந்து பேர் செய்கிற வேலையில் நாலில் ஒரு பகுதி கூட இருபது சிறுமியர் செய்திருக்க மாட்டார்கள். திறமை தேவையான தொழிலில் திறமையற்றவர்கள் மிகப் பலர் ஈடுபடுத்தப்படுவது நற்பயனை விளைவிக்காது என்ற கருத்தை திரிபுரிமக்கள் அவர்களுடைய வாழ்க்கைச் சூழலுக்கு ஏற்றாற்போலவும், தமிழ் மக்கள் தமது உழவுத் தொழில் சூழலுக்கு ஏற்றாற்போலவும் உவமைப் பழமொழிகளாக வெளியிட்டுள்ளார்கள். பழமொழிகளில் காணப்படும் உவமை, உருவகம், குறியீடு, முதலிய வெளியீட்டு முறைகளெல்லாம், பழமொழிகளைப் படைக்கிற மக்களது சமுதாயச் சூழலுக்கும், உழைக்கும் வாழ்க்கைக்கும் ஏற்றாற்போல் இருக்கும். இதைப்போலவே மற்றோர் உதாரணம் காண்போம். பழமொழி 32-ல் இரண்டு மொழிகளிலும் கீழ்வருமாறு உள்ளன. திரிபுரி தமிழ் நிறைந்திருக்கும்