பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. வாEEஐை . . . . . . . Q é 令 & g 9 ● ● * ● ● ● 歌 雄 陵 9 @ é ● 臀 139 ಇಣ இவற்றின் கருத்துமலிவாக இருக்கிறது என்பதால் பயனற்றவற்றை வாங்கிவிடக் கூடாது என்பதே நிறைய கிடைத்தாலும் பயனற்றவற்றை பெறக்கூடாது என்பதே. திரிபுரிப் பழமொழி உண்ணுவதற்குத் தேவையான காய்கறிகள் மலிவாகக் கிடைத்தால் அவற்றில் புழு இருக்கும். வாங்கக்கூடாது என எச்சரிக்கிறது. தமிழ் பழமொழி கை நிறைய கிடைத்தாலும் கழுதை விட்டையால் பயன் இல்லை என்பதைக் கூறுகிறது. பசுவின் சாணம் வயலுக்கு உரமாகும். உழவர்கள் அதைத் தேடிப் பெறுவார்கள். கழுதையின் விட்டை தெருவெல்லாம் கிடந்தாலும் யாரும் அதைப் பொறுக்குவதில்லை. ஒரே கருத்தை இவ்விரு மக்கள் வெளியிடும் முறையில் உள்ள வேறுபாட்டைத் தெளிவாகவே கண்டோம். இந்த வேறுபாட்டிற்குக் காரணம் தொழில் வேறுபாட்டால் உண்டாகிற மதிப்பு வேறுபாடுகளே. துஷார் காந்தி தியோகி தமது கட்டுரையில் வெளியிட்டுள்ள 35 திரிபுரி பழமொழிகளில் 30 பழமொழிகளுக்கு தமிழில் நெருக்கமான இணைப் பழமொழிகள் உள்ளன. அவற்றில் 13 பழமொழிகளுக்கு ஒருமையான இணைகள் உள்ளன. (identicalparallels) இவை திரிபுரிப் பழமொழியை சொல்லுக்குச் சொல் தமிழில் மொழிபெயர்த்ததைப்போல் இருக்கின்றன. இவை பொது நீதிக் கருத்துக்களாகவும்,உழைப்புபற்றிய கருத்துக்களாகவும் உள்ளன. உழைக்கும் வாழ்க்கையின் ஒற்றுமையின் காரணமாக ஒரே விதமான ஒழுக்க நியதிகளும், நீதிக் கருத்துக்களும் மொழியால் பிரிந்திருக்கும் மக்களிடையே தோன்றுகின்றன. இத்தகைய ஒருமித்த கருத்துக்களை ஒரே விதமாக உவமை, உருவகம், குறியீடுகளால் அவர்கள் வெளியிடுகிறார்கள். இவற்றில் ஏற்படும் வேறுபாடுகளுக்குக் காரணம் அவர்களது தற்காலப் புறச் சூழ்நிலை, உற்பத்தி வளர்ச்சி நிலை, பண்பாட்டு நிலை, வேறு பண்பாடுகளுடன் தொடர்பு முதலியன. சூழ்நிலை மாற்றத்தாலும், தொழில் மாற்றத்தாலும் நமது நாட்டின் நாட்டார் வாழ்க்கையும் பண்பாடும் வெகு வேகமாக மாறி வருகின்றன. இவைகுழப்பமாக மாறிவரவில்லை. விஞ்ஞானரீதியான சமூக வளர்ச்சி விதிகளுக்கு ஏற்பவே மாற்றங்கள் நிகழுகின்றன. நம் நாட்டின் பல பிரதேசங்களில் வாழுகிற கிராமப்புற உழைப்பாளி மக்களின் சமுதாயங்கள் அசமத்துவ வளர்ச்சி நிலைகள் உள்ளன. அசமத்துவ வளர்ச்சி நிலைகளுக்கும் பொருந்துவதான சமூக வளர்ச்சி விதிகள்