பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ఫ్త ឆ្អ ដែលវាត្រា » ... « « » . . છે જ્યા છે કે છ છ છ દ્રશ્ન જ છ ક્ષે છ છ છ દ્વ છુ ફ ક્ર હ. દ્રુ 145 ಇಣ இதனருகில் உள்ள நதியின் தீர்த்தக் கட்டத்திற்கு ஜடாயு தீர்த்தம் என்பது பெயர். இக்கட்டத்தில் தகனம் செய்யப்பட்ட சடலத்தின் எலும்புகளைப் பானையில் வைத்துப் புதைக்கிறார்கள். இவ்வாறுசெய்வதால் இறந்தவர் புண்ணியம் பெறுவார், கவர்க்கம் புகுவார் என்ற நம்பிக்கையுள்ளது. இவ்விடம் புனிதமானது என்று காட்ட ஒரு புனைகதை வழங்குகிறது. இவ்விடத்தில் சீதையைத் தூக்கிச் சென்ற இராவணனைத் தடுத்துச் சீதையை மீட்க ஜடாயு போர் புரிந்தான். இராவணன் தனது வாளால் அவன் இறகுகளை வெட்டியெறிந்தான். ஜடாயு மரண வேதனையில் கிடந்தான். சீதையைத் தேடிவந்த இராமன் மனம் வருந்தி அவனிடம் நிகழ்ந்ததைக் கேட்டுச்சிதை இருக்குமிடத்தை அறிந்தான். ஜடாயு உயிர் விட்டான். இராமன் அவனுக்கு மகன் முறையாக ஈமக்கடன்கள் செய்தான். ஜடாயுவைத் தகனம் செய்த இடம்தான் ஜடாயு தீர்த்தம் என்று புனித தீர்த்தமாகியது.” இவ்விடத்திற்குச் சிறிது தூரத்தில் ஒரு கிணற்றில் ஒரு குழுச்சிலை இருப்பதாக டாக்டர் அங்குசாமி கூறுகிறார். அதில் இராமன், இலக்குவன், ஜடாயு மூவரின் உருவங்கள் செதுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இப்புனைகதையை வலுப்படுத்துவதற்காக இச்சிலை உருவாக்கப்பட்டிருக்கலாம். உண்மையில் ஜடாயு தீர்த்தம் என்பது, மயானத்திற்கு அருகில் உள்ள நீரோட்டமேயாகும். அக்கரையிலுள்ள கிணற்றுப் பகுதியல்ல. இங்கு சிலையெதுவும் இல்லை. 2. அனுமான் வால் இதே மயானத்தின் அருகில் ஒரு வளைந்த புடைப்புக்கோடு செதுக்கிய நீண்ட கல் ஒன்று கிடக்கிறது. இதனருகில் ஒரு மாந்தோப்பு இருந்தது. பாடை தூக்கிச் செல்லுபவர்கள் அதைத் தாண்டாமல், சுற்றிச் செல்லுவார்கள். . இக்கல்லுக்கும், இந்நிகழ்ச்சிக்கும் ஒரு தொடர்புமில்லை. ஆனால் இக்கல் அனுமார் வால் என்று கருதப்பட்டு, ஒரு புனைகதையும் இதை விளக்கப் புனையப்பட்டுள்ளது. பாரதத்தில் பாரிஜாத மலரைப்