பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ. 148 . . . . . . . . . . . . . . . . பழங்கதைகளும் பழமொழிகளும் இப்புனைகதையின் மூலம் (source) கம்பனது கடல் தாவுபடலமே. இப்புனை கதைக்குச் சான்றுகளை உண்டாக்க ஒரு பாதத்தை மலையுச்சியில் தோண்டியுள்ளாகள். 5. மருத்துவாமலை இது ஆரல்வாய்மொழியருகிலுள்ள மலையையும், கன்னியாகுமரி அருகிலுள்ள மலையையும் குறிக்கும். இம்மலை, அனுமன் சஞ்சீவிமலையை இலங்கைக்குத் தூக்கிச் சென்றபோது உதிர்ந்த பாறைகள் என்று சொல்லப்படுகிறது. இதுதான் இம்மலைகளின் தோற்றம் பற்றிய புனைகதைகள்." 8. தாடகை மலை கன்னியாகுமரி மாவட்டத்தில் தரிசனங்கோப்பு என்ற ஊரின் அருகில் ஒரு நீண்ட பாறையொன்றுள்ளது. அது கற்பனைக் கண்ணோடு பார்த்தால் ஒரு பேருருவம்கொண்ட பெண்ணுருவம் படுத்துக் கிடப்பதுபோலக் காணப்படும். பூதாகாரமான தலையும் மார்பும் வயிறும் கால்களும் இருப்பது போலத் தோன்றும். இது இயற்கையின் விசித்திரமான படைப்புத்தான். 7. வில்லுக்கீறி இதற்கோர் தோற்றப் புனைகதையுள்ளது. தாடகையை இராமன் கொன்றபோது இங்குதான் விழுந்தாள். விழுந்த பின் கல்லாகி விட்டாள்." - இதற்குச் சில மைல்களுக்கப்பால் ஒரிடம் வில்லுக்கீறி என்றழைக்கப்படுகிறது. அங்கு ஒரு ஊரும் உண்டு. இது தக்கலைக்கு நான்கு மைல் தெற்கேயுள்ளது. அவ்வூர் மக்கள் வில்லுக்கீறி என்ற பெயர்த் தோற்றத்திற்குக் காரணமாக ஒரு புனைகதையை நம்புகிறார்கள். இராமன் இவ்விடத்தில் இருந்துதான் தாடகை மீது அம்பெய்தான். முதலில் அவளைக் கண்டதும் அவன் பெண்ணென்று தயங்கி நின்றான். பின் அவள் பாறைகளை வீசினாள். ஒரு சூலத்தைக் குறி பார்த்து