பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

e 9 & 4 × < * * * * * * * * * * பழங்கதைகளும் பழமொழிகளும் இது இராமாயணத்தில்அனுமனுக்கும், இராமனுக்கும் உள்ள தொடர்புதான். இத்தொடர்பே புனைகதையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இராமனது மேன்மை, சந்தியாவந்தனம் ஆகிய மதநிகழ்ச்சியிலும், அவனது வில்லாற்றலிலும் சுட்டிக்காட்டப்படுகிறது. அவை அனுமனது உடல் வலிமைக்கு மேல், நீரைப் பெறுவதில் வெற்றி கொணர்கிறது. தனது துணைவனுக்குக் கோபம் வராமலிருக்க இராமன் ஊற்றிற்கு அனுமனது பெயரை இடுகிறான். கருடன், அனுமன் முதலிய கதாபாத்திரங்கள், மனித இயல்புகொண்ட விலங்குகள். இவை போன்றவை தனியாகவே தெய்வங்களாக வணங்கப்பட்டவையாக இருத்தல் வேண்டும்." இவை மந்திரத்தோடும், சூன்யத்தோடும் தொடர்புகொண்டவை. கருடனும், அனுமனும், நாகத்தை அடக்கவும், பேய்களை விரட்டவும், உயர்ந்த தெய்வங்களாகக் கருதப்பட்டன. solossog goal uringfi Gloilošičár (folk gods above the level of ghosts and spirits) இவை உடல் வலிமையாலும் மந்திரவலிமையாலும் செயல்படுபவை. இராமன் ஒரு தெய்வ வணக்கத்தைப் பின்பற்றுபவன். வில்-அம்பு என்ற ஆயுதங்களையுடையவன். அவனுடைய சக்தி, விலங்குகளுடைய சக்திக்குமேலாக இராமாயணத்தைப் பின்பற்றியே மதிக்கப்படுகிறது. இங்கே பாமரர் தெய்வங்களும் விஷ்ணு அவதாரமான இராமனும் கீழ்நிலை, மேல் நிலைகளில் முரண்படும்போது சமாதானப் படுத்தப்படுகின்றன. அப்பகுதி மக்களின் ஸ்தல தெய்வமான அனுமனுக்கு இராமனே முக்கியத்துவம் கொடுப்பதாகக் கூறி புனைகதை இருவரது உறவையும் சீராக்குகிறது. இதுபோலவேதான் ஜடாயுவின் இராமாயண பாத்திர நிகழ்ச்சி இராமன் சீதையைத் தேடும் நிகழ்ச்சியோடு தொடர்பு படுத்தப்பட்டுள்ளது. இதில் வேறோர் (mytheme) அல்லது புனை கதைப் பகுதி உள்ளது. உலகப் புனைகதைகளில் ஒவ்வோரிடத்தில் ஒவ்வொரு விலங்கு மனிதனுக்கு உதவும். வேறோர் விலங்கு மனிதனுக்கு இடையூறு செய்யும் கதையில் இவற்றுள் ஒன்று தலைவனுடைய முன்னேற்றத்திற்குத் துணை செய்வதாகவும், மற்றொன்று இடையூறு செய்வதாகவும் இருக்கும். தென்னமெரிக்க இந்தியப் புனைகதைகளில் விலங்குகளில் ஜாகர் மனிதனுக்குத் துணைசெய்வதாகவும் பூனை அல்லது காகம் தீமை