பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

篮郡。娅邸照超盔5呜····。。。 * * * * * * * * * * * * * * * * * * * *

செய்வதாகவும் வருவதைப் பேராய்வாளர் லெவிஸ்ட்ராஸ் எடுத்துக் காட்டியுள்ளார்."

இவற்றை டோடம் (Totem) விலங்கெனக் கொள்வதற்கில்லை. இதன் தோற்றம் டோடம் நம்பிக்கையிலிருந்து பிறந்திருக்குமாயினும், புனைகதையில் இதற்கு மனித வாழ்க்கையில் ஒரு பங்கு (function) இருக்கிறது. குலக்குறி விலங்கு மந்திர சக்தியுடையது. புனைகதையில் விலங்கு மனித இயல்புகளான நன்மை, தீமைகள் புரியும் சக்திகள் 盟_邸了6鲇仔。 இராமாயணத்தில் வரும் விலங்குகள் புனைகதை விலங்குகளின் தன்மையுடையனவே. தமிழ்நாட்டில் டோடம் நம்பிக்கையுண்டு என்பதை குரு ஞானப்பிரகாசர் காட்டியுள்ளனர்." இவை தமிழ்ப் புனைகதைகளிலும் இடம் பெற்றுள்ளன. இந்நம்பிக்கையின் அடிப்படையில் தம்மிடையே பரவிய இராமாயணக் கதையின் ஜடாயுவும், ஜாம்பவான் என்ற கரடியும், மனிதனுக்கு உதவும் விலங்குகளாகக் கொள்ளப்பட்டன. இராமனுக்கு உதவும் ஜடாயுவின் தன்மையோடு, தமிழ்க் குலக்குறி விலங்குகளிலிருந்து தோன்றிய புறக்கதை விலங்கையும் இணைத்து அவற்றைப் புனிதமானதாகக் கருதி அவை தகனம் செய்யப்பட்ட இடம் தீர்த்தக் கட்டமாக்கப்பட்டிருக்கவேண்டும். கழுகு, கரடி ஆகிய விலங்குகளின் வழிபாடு இன்று பல பகுதிகளில் உள்ளன." திருக்கழுக்குன்றத்துக் கழுகுகள் பெருமாள் கோவில்களிலும், தனியாகவும் கருட வணக்கம்" கோவில் இல்லாத ஊர்களில் கூட வெள்ளிக்கிழமை கருட தரிசனம் முதலிய வணக்கங்கள், குலக்குறி விலங்கு வழிபாட்டின் வளர்ச்சியைக் காட்டுகின்றன. களக்காட்டுப் பகுதியில் கரடிமாடன், புலிமாடன் உருவங்கள் உள்ளன. இவை மனிதத் தன்மையேற்றப்பட்ட, வளர்ச்சி பெற்ற குலக்குறி விலங்குகளாகத் தோன்றுகின்றன. எனவே ஏற்கெனவே பழக்கமான நன்மை புரியும் விலங்குகள் என்ற நம்பிக்கையிலிருந்து ஜடாயுவையும் கருடனையும் தேர்ந்தெடுத்து இடங்களைப் புனிதமாக்குவது மிகவும் எளிய அறிவூக்க முயற்சியே. ஏற்கெனவே இருந்த நாட்டு நம்பிக்கைகளோடு, இராமாயணக் கதையின் ஜடாயு பாத்திரம் பொருந்துவதால், ஜடாயு கெளரவிக்கப்பட்டு இராமனுக்கு உறவாக்கப்பட்டு, அவனைத் தகனம் செய்த இடமாகக்