பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ఖీ ត្. សត្វមាស - a - • • • • • • - • • • - → - • • - * * * * * * 153 গুঞ্জ அனுமகுண்டம் என்ற மலையுச்சியிலுள்ள குழி மனிதனால் தோண்டப்பட்டதே. இம்மலையுச்சிக்கும் மலைக்கும் புனிதத் தன்மை ஏற்படுத்தவே அனுமன் இக்குழியோடு தொடர்புபடுத்தப்படுகிறான். அனுமன் விசுவரூபம் எடுத்தபோது, அவனுடைய பேருருவத்தின் பாரம் தாங்காமல்மலைச்சிகரத்தில் குழிவிழுந்தது. அக்குழிதான் இதுவென்று, ஒரு தோற்றப் புனைகதை, காப்பியத்தில் சொல்லப்படும் அலுமின்து பெருஞ்செயல் ஒன்றின் விளைவானதாகப் புனையப்பட்டுள்ளது. மருத்துவாமலை பற்றிய புனைகதையிலும் அனுமனது உடல் வலிமையும், இராமனுக்கு உதவுகிற தன்மையும் அடிப்படைகளாக உள்ளன. நாட்டாரது தெய்வ நம்பிக்கை, மதிப்புகளின் அடிப்படையிலேயே இப்புனைகதைகள் தோன்றியுள்ளன. இராமனது இயல்புகள் சாதாரண மக்கள் தம்மிடையே மதிக்கும் இயல்புகளாக இல்லாமல் அசாதாரணமான காப்பியத்தலைவர்களிடம் இக்கதை காணும் மதிப்புகளாக உள்ளன. புதிய கருவிகள், உலோகம் இவற்றின் மந்திர சக்தியில் மக்கள் பண்டைக்காலத்தில் கொண்டிருந்த நம்பிக்கையின் எச்சம் இராமனது இயல்புகளில் காணப்படுகிறது. இராமன் வில்லினாலும், அம்பினாலும் செய்வித்த அதிசய நிகழ்ச்சிகள் பல புனைகதைகளில் காணப்படுகின்றன. புல்லால் அணைகட்டியதும், புல்லை அம்பாக்கியதும், இவ்விரண்டின் தொடர்பைக் காட்டுகின்றன. வல்லவனுக்குப்புல்லும் ஆயுதம் என்ற பழமொழி, வில், வேல்களின் மீது மக்கள் கொண்ட அதிசய உணர்வின் வெளியீடே. உழவுத் தொழிலில் ஈடுபட்ட மக்கள், இவ்வாயுதங்களைப் பயன்படுத்திய காப்பியத்தலைவனை தம்மிலும் வேறுபட்ட உயர்ந்த மனிதாதீத சக்தியுடைய புராண பாத்திரமாகவே கருதினர். காப்பியத் தலைவனது அதிசயித்தக்க சக்திக்கு அவனது கருவிகளும், மனித குணங்களும் காரணங்களாகக் காட்டப்படுகிறது. அனுமனது சக்திக்கு, உடல் வலிமையை மிகைப்படுத்தியும், இராமபக்தியை அடிப்படையாகக்கொண்டும் விளக்கம் காணப்படுகிறது.