பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5

அறிந்துகொள்ள முடிகிறது. தாலமி அரசனின் கல்வெட்டுக்கள், இச்சடங்கு விழா நடைபெற்ற விதத்தைக் கூறுகிறது. இவ்விரண்டு சான்றுகளிலும் கதாநாயகர்களின் பெயர்கள் வேறுபட்ட போதிலும் அவர்களின் இயல்பும், கதையின் நிகழ்ச்சிகளும் ஒன்றாகவே இருக்கின்றன. இத்தெய்வங்களின் உருவத்தை மண்ணாலும், பார்லி வைக்கோலாலும், மணலாலும் செய்து தங்க நிற வர்ணம் பூசுவார்கள். எகிப்திய மாதமான கோயாக் மாதம் 12-ம் தேதி விழாத் தொடங்கும். 24-ம் தேதி வரை அவ்வுருவத்தைப் புனித முழுக்காட்டுவார்கள். பின்பு அவ்வுருவத்தை ஒரு படகில் வைத்து பாபைரஸ் என்ற நாணலால் செய்யப்பட்ட 24 படகுகள் புடை சூழ நீரினுள் செலுத்துவார்கள். படகுகளில் மொத்தம் 364 விளக்குகளை (இது ஒர் ஆண்டைக் குறிக்கும்.) ஏற்றுவார்கள். 24-ம் தேதி ஆஸிரிஸின் உருவத்தை, பிணத்தைப் பதனிட்டு மம்மி ஆக்கிக் அதனை அலங்களிப்பார்கள். அதன் பின்னர் ஒரு சவப்பெட்டியில் அதனைக் கிடத்துவார்கள். உருவத்தின் கீழ் விதைகளைப் பரப்பி வைப்பார்கள். 30-ம் தேதி சவப்பெட்டியை ஒர் அறையில் வைத்துப் பூட்டுவார்கள். இப்பொழுது ஆஸிரிஸின் இறந்து போன நிகழ்ச்சி சடங்காக நடிக்கப்பட்டுவிட்டது. இனி உயிர்த்தெழும் நிகழ்ச்சியையும் ஆஸிரிஸின் கோவிலிலுள்ள சிற்பங்கள் காட்டுகின்றன. வட எகிப்தில் காணப்படும் பாழடைந்த ஆஸிரிஸ் கோவில் சுவர்களில் காணப்படும் புடைப்புச் சிற்பங்களிலிருந்து உயிர்த்தெழும் கதையை அறிய முடிகிறது. "மம்மியாகக் கிடக்கும் ஆஸிரிஸைச் சூழ்ந்து பல தெய்வங்கள் நிற்கின்றன. அனுபிஸ் ஐஸிஸ், நெப்திஸ் முதலிய தெய்வங்களும் பசுத்தெய்வமான ஹாதோரும், அவளுடைய சகோதரன் ஹெகட்டும் ஆஸிரிஸின் உடலருகில் நிற்கிறார்கள். உயிர்த்தெய்வமான தவளைத் தெய்வம் உடலருகில் உட்கார்ந்திருக்கிறது. ஒரு கழுகு ஆஸிரிஸின் தலைப்பக்கமும், மற்றொன்று காலினருகில் பறப்பதுபோல சித்திரங்கள் இருக்கின்றன. அடுத்த சித்திரங்களில் ஆஸிரிஸ் தலையில் மகுடத்தோடு தலையைத் தூக்குவது போலவும், பின் எழுந்து நிற்பது போலவும் காணப்படுகின்றன. கடைசிச் சித்திரத்தில் ஆஸிரிஸ் செங்கோலைக் கையிலேந்தி நிற்கிறான். ஒரு தாடி தரித்த ஆண்தெய்வம் கையில் கிரக்ஸ் அனஸ்தா என்ற உயிரின் அடையாளத்தைக் கையில் பிடித்துக்கொண்டு நிற்கிறது: