பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ఙ్ఞ 磁 3 ※ 8 ö . . . . . . . . . . . பழங்கதைகளும் பழமொழிகளும் “காட்டுமிராண்டி சமுதாயத்தில் வழங்கிய புனைகதை அதாவது மூலநிலைப் புனைகதை சொல்லப்படுகின்ற ஒரு கதையன்று. அது வாழ்க்கையின் உண்மையாகும். இன்று நாம் படிக்கும் ஒரு நாவலின் தன்மையைப்பெற்றதன்று நாகரிக முற்கால புனைகதை. அக்கதையின் நிகழ்ச்சிகள் உண்மையில் புராதன காலத்தில் நடைபெற்றதாக அக்கதையைச் சொல்லுபவர்கள் நம்புகிறார்கள். அதுமட்டுமல்லாமல் அக்கதையின் சம்பவங்கள், நிகழ்ந்த காலத்திலிருந்து தம் காலம் வரை உலகையும், மனித விதியையும் இயக்கிவருவதாகவும் அவர்கள் நம்புகிறார்கள். ஒரு கிறிஸ்தவன் பைபிள் கதையான, சிருஷ்டி, மனிதன் தாழ்வு, சிலுவையில் மரித்த கிருஸ்துவினால் மனிதன் மேன்மை பெறுவது.ஆகிய சம்பவங்கள் எவ்வளவு உண்மையெனக் கருதுகிறானோ அவ்வளவுக்குத் தான் கூறும் கதைகள் உண்மையெனப் பண்டை மனிதன் நம்பினான்.” பண்டைய பண்பாட்டு வளர்ச்சி நிலையில் இருக்கும் தற்கால இனக்குழு மக்களும் அவ்வாறே நம்புவதை மானிடவியலாளர் கண்டுள்ளார்கள்." 1னைகதைகள் இத்தன்மையன என்பதை அறிந்துகொண்டபின், நாம் உலகப் படைப்புக்கதைகளில் மிகப் பண்டைக்காலக் கதைகளை ஆராய்ந்து அவற்றின் தோற்றத்திற்கு அடிப்படையான சமுதாய அடித்தளத்தைக் கண்டுபிடித்து இரண்டையும் தொடர்புபடுத்திக் காண முயலுவோம். படைப்புக் கதைகளில் மிகப் பழமையானவை பாபிலோனியசுமேரியக் கதை, கிரேக்கக் கதைகள் ஆகியவையாகும். அதற்கடுத்த பண்பாட்டுக் கட்டத்தில் யூதர்களது யெஹோவா - படைப்புக்கதையைக் கூறலாம். இதைப்பின்பற்றியே பைபிள் உலகப்படைப்பின் வரலாற்றைக் கூறுகிறது. ஏறக்குறைய அதே பண்பாட்டு வளர்ச்சி நிலையில் ரிக்வேதத்தில் காணப்படும் புருஷ சூக்தக் கதைகளைக் கூறலாம். பின்னர் விஷ்ணு புராணத்தில் கூறப்படும் நாராயணன் - உலகப்படைப்புக் கதையைக் குறிப்பிடலாம். கால நிர்ணயம் செய்யமுடியாத தந்திரீக நூல்களில் காணப்படும் படைப்புக் கருத்துக்கள் மிகப்பழமையானவை என்பதில் சந்தேகமில்லை.