பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ജ് f{} ಇಣ அப்ஸ்அவும் அவனுடைய அமைச்சனும் தியாமத்தைப் போய்ப் பார்த்து அவளை வணங்கிவிட்டு, தேவர்களுடைய சூழ்ச்சி பலிக்காமல் இருப்பதற்கு என்ன செய்யவேண்டுமென்று கேட்டார்கள். e = * * * * * * * * * * * * * * பழங்கதைகளும் பழமொழிகளும் “ஒளி மிக்கவளே, தேவர்கள் சூழ்ச்சியை அறிந்து நான் கவலைப்படுகிறேன். இரவு, பகலாக எனக்கு உறக்கமில்லை. அவர்களை அழித்து நிம்மதியாக ஓய்வுகொள்ள விரும்புகிறேன்” என்றான், அப்ஸ9. தியாமத் இதனைக் கேட்டு உறுமினாள். புயல்கள் வீசின. அப்ஸ்வைப் பார்த்து அவள் விடை கூறினாள்: "அவர்கள் பலசாலிகளாயினும் நம்மால் அவர்களை அழித்துவிட முடியும்" இதைப் பற்றி இயா அறிந்தான். தீய தேவதைகள், தேவர்களை அழிக்க எண்ணிச் சூழ்ச்சி செய்வதைப் பற்றித் தெரிந்துகொண்டான். ஒரு மந்திரத்தால் அப்ஸஇவையும் மும்முவையும் அழிந்துவிடச்செய்தான். அவர்களது நண்பனான கிங்கு தியாமத்தைப் பார்த்து “மும்முவையும், அப்ஸஇவையும் அழித்துவிட்டார்கள். அதற்காக நீ பழிவாங்க வேண்டும், புயல் தேவியே” என்று கூறினான். “போர் துவங்கு” என்று தியாமத் கட்டளையிட்டாள். “சூபர் தாய்” என்ற மறுபெயர்கொண்ட தியாமத் பேய்களையும், ராட்சசப் பாம்புகளையும், மலைபோன்ற விஷ ஜந்துக்களையும், தீயுமிழும் டிரகான்களையும் படைத்தாள். மலைப் பாம்புகளையும், நச்சரவங்களையும், புயல்வீகம் விலங்குகளையும், வேட்டை நாய்களையும், தேள் மனிதர்களையும், மீன் மனிதர்களையும், ராட்சஸ் ஆடுகளையும் படைத்தாள். கிங்குவைப் படைத் தலைவனாக்கினாள். அவனை முதல்தேவன் என அறிவித்தாள். அவனை உயர்ந்த இருக்கையில் அமர்த்தி, சிறந்த உடைகள் அணிவித்து, அவனிடம் சொன்னாள்: "உன்னுடைய ஆணையைத் தேவர்கள் நிறைவேற்றவேண்டும். நீ அவர்களை அடக்கி ஆளவேண்டும். நீயே யாவரினும் வலியவன். உன்னை நான் கணவனாக ஏற்றுக்கொள்ளுகிறேன். மூன்றுலகிற்கும் நான் உன்னை அதிபதியாக்குகிறேன்”என்று கூறி அவனிடம் விதியின் கல்வெட்டையளித்தாள். . . .