பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

凌 * * * 法 é ä . . . . . . . . . பழங்கதைகளும் பழமொழிகளும் மும்முவையும் கொன்றான். ஆனால் மிகவும் சக்தி வாய்ந்த தியாமத் என்னும் உலக மாதா இன்னும் உயிரோடிருந்தாள். தனது உறவினர்களின் சாவிற்காக அவள் பழிவாங்கத் துடித்தாள். இயா, அவளோடு போரிடத் தயாரிப்புச் செய்தான். சாதாரணமான ஆயுதங்களால் அவளைக் கொல்ல முடியாது. அவளுடைய மந்திர சக்தியும், தந்திரத் திறமையும் அவளை யாராலும் வெல்ல முடியாதவளாக்கின. இயா மந்திரவசியங்களையும், செய்வினைச் செயல்களையும் அவளுக்கு எதிராகச் செய்து பார்த்தான். அவற்றால் அவளை எதுவும் செய்துவிட முடியவில்லை. அவளுடைய உயிர்நிலை அவளுடைய கல்லீரலில் இருந்தது. அவளுடைய வயிற்றில் குத்தி கல்லீரலைக் கிழித்தால் அவள் இறந்துபோவாள்.” இதனைத்தான் பாபிலோனியக் கதையில் மொரோடாக் செய்ததாக நாம் கண்டோம். இக்கதையில் தியாமத் தனது கணவனையும் மகனையும் விட வலிமைமிக்கவள் என்பது கூறப்பட்டிருப்பது முக்கியமானது. இக்கதை மொரோடாக் சிறு தெய்வமாயிருந்து தனிப்பெரும் தெய்வமானதைக் கூறுகிறது. அவனே தனிப்பெருங் கடவுளாக வழிபாடு செய்யப்பட்ட காலத்தில் இக்கதை எழுந்திருக்கவேண்டும். இது அரசும், அரசனும் பாபிலோனிய சமுதாயத்தில் தோன்றிய காலத்தில்தான் தோன்றியிருக்க முடியும். இக்கதையை ஆண் ஆதிக்க சமுதாயத்தில், ஆண் வலிமை போற்றப்பட்ட காலத்தில் அச்சமுதாயத்தின் கவிஞர்கள் உருவாக்கியிருத்தல் வேண்டும். மாரோடாக் மர்டாக் என்ற பெயரிலும், எல் என்ற பெயரிலும், பாபிலோனியாவிற்கு வெளியே உள்ள நாடுகளில் பிற்காலத்தில் வழிபாடு செய்யப்பட்டான். இவன் ஏகநாயகன், தனிப்பெரும் தேவன் என்று கருதப்பட்டாலும், அவனுக்குத் தந்தையும் பாட்டனும் இருந்தார்கள். அவர்களுக்குப் பகைவர்கள் இருந்தார்கள். அப்பகைவர்கள் பெண்ணாதிக்க, பெண்ணுரிமைப்பண்பாட்டினை உடையவர்கள். தியாமத்தான் அவர்கள் எல்லோருக்கும் தாய். இவளை அன்ஷாராலும், இயாவாலும் கொல்ல முடியவில்லை. மொரோடாக் தான் அவளைக் கொல்லும் அளவுக்கு வலிமையும் வீரமும் உடையவனாக இருந்தான். மொரோடாக் உலகைப்படைத்தான். மனிதர்களைப் படைத்தான். ஆயினும் அவனுக்கு முன் கடலும், வானமும், தேவர்களும்,