பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ఢీ நன. வானமாமலை . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . 23 ಇಣ ஆணாதிக்கமுடைய சமுதாயத்தின் கற்பனையில் தோன்றிய ஒரு தேவன். "ஆணாதிக்கம் ஆடு, மாடு மேய்க்கும் சமுதாயத்திலும், கலப்பை விவசாய சமுதாயத்திலும் தோன்றும்" என்று சமூகவியலார் ஆய்வுகளின் முடிவுகள் தெளிவாக்குகின்றன. ஏனெனில் இச் சமுதாயங்களில் ஆண்களின் உழைப்பு பெண்களின் உழைப்பைவிடச் சமுதாயத்திற்குத் தேவையான உற்பத்தி சக்தியாகப் பயன்படுத்தப்பட்டு சமுதாயச் செல்வத்தின் பெரும் பகுதியையளிக்கிறது. ஆனால் மொரோடாக்கும் அவனுடைய முன்னோர்களும் தியாமத்தின் வழித்தோன்றல்கள் என்று கதை கூறுகிறது. அவளே உலகத்தாய் என்றும் அழைக்கப்படுகிறாள். அப்படியானால் தியாமத்தை அவளுடையவழித்தோன்றல்களே கொன்றுவிடப் போர் செய்வானேன்? கார்டன் சைல்டின் கூற்றின்படி ஹாலாபியன் கட்டத்தில் பெண்ணுருவச் சிலைகள் மிகுதியாக கிடைக்கின்றன. மொரோடாக் ஏக தெய்வமான பிறகு ஆண்சிலைகளே அதிகமாகக் கிடைக்கின்றன. அக்காலத்திற்கு முந்தி, ஹஸ்ளபதியான என்ற தலத்தில் இருபது ஆண் தெய்வங்களின் சிலைகள் அகப்பட்டன. இங்கு பெண் சிலைகள் அகப்படவில்லை. இதிலிருந்து பாபிலோனியாவில் தாய் வழிச் சமுதாயமும், தந்தை வழிச் சமுதாயமும் மொரோடாக் கதை தோன்று முன்னரே தனித்தனியாக வெவ்வேறு தலங்களில் இருந்திருக்க வேண்டுமென ஊகிக்கலாம். தாய்வழிச் சமுதாயத்திலிருந்து தாங்கள் தோன்றியவர்கள் என்று கருதிய தந்தைவழி மக்கள் தங்களுடைய பரம்பரையைத் தோற்றவித்தவள் ஒரு பெண்னென்னும் முந்தைய சமுதாய நிலைமையை இனக்குழு நினைவாகக் கொண்டிருத்தல் வேண்டும். எனவே தங்கள் சமுதாயத்தின் நிழலாகப் படைத்த முற்காலத் தேவருலகிலும் தாயையே மூல புருஷியாகக் கருதினர். ஆனால் தியாமத்தை ஒரு ராட்சஸியாகவும் அவளை எதிர்த்துக் கொன்றவனைத் தேவனாகவும் ஏன் இக்கதையில் படைத்தார்கள்? பாபிலோனியாவில், நாகரிகத் துவக்கத்துக்கான உற்பத்தி சக்திகள் பெருகி, நாட்டை ஒன்றாக்கி அரசு தோன்றுவதற்கு இரு