பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& * शं * & १ * श् ड्' ं * * & * & * பழங்கதைகளும் பழமொழிகளும் முறையான தாய்வழி, தந்தைவழிச் சமுதாயங்களை இணைக்க வேண்டும். தந்தைவழிச் சமுதாயம் மேய்த்தல், விவசாயம், உலோக உபயோகம் இவற்றால் வளர்ச்சிபெற்றுவிட்டதால் தேங்கி நின்ற புராதன விவசாய நிலையிலும், வேட்டை நிலையிலும் இருந்த தாய்வழிச் சமுதாயத்தை அழிக்கப் போர் செய்யவேண்டும். தாய்வழிச் சமுதாயம் தங்கள் முன்னேற்றத்திற்கு இடையூறெனக் கருதிய தந்தைவழி மக்கள் அதனை அழிக்கச் செய்த போர்கள், இக்கதை தோன்றுவதற்கு முன்பே நடைபெற்றிருத்தல் கூடும். தியாமத் அதற்கு முன்னரே தாய்வழிச் சமுதாயத்தால் வணங்கப்பட்ட தெய்வம். அச்சமுதாயத்திலிருந்தே, உற்பத்திச் சாதன வளர்ச்சியால் பிரிந்து தந்தை வழிமுறையைக் கொண்டு வளர்ச்சிபெற்று வலிமை பெற்ற சமுதாயத்தில் ஆண் தெய்வங்களைப் படைத்து மக்கள் வழிபட்டார்கள். இவ்விரு சமுதாயங்களின் பகைமை தியாமத்தேவர்கள் பகைமையாக வருணிக்கப்பட்டது. தியாமத் மிகப் பழங்கால தெய்வமாதலால் அதற்குப் போர்க்கருவிகள் எதுவுமில்லை. அதுவே ஆளுகிற ஆண்களை நியமித்தது என்றால் அது சர்வ வல்லமையுடையது. அது உலகைப் படைக்க அப்ஸி துணையாயிருந்தான். ஆனால் இறந்தபின் அவள் கிங்குவைத் துணையாக்கிக்கொண்டாள். இவையெல்லாம் தேவர்கள் - தாய்த் தெய்வம் என்ற கதைமாந்தர்களின் செயல்களாகக் கூறப்பட்ட போதிலும், தாய்வழிச் சமுதாயத்தில் நிகழ்கிற செயல்களே. தியாமத் உலகையும், மக்களையும், உயிரினங்களையும் படைக்கவில்லை என்று இக்கதைகூறுகிறது. ஆனால் அவளிடமிருந்தே உலகம் தோன்றியதாக தாய்வழி மக்கள் நம்பினர். எனவே இக்கதை புனைந்தவர்கள் அவளைக் குழப்பத்திலிருந்து வானையும் கடலையும் படைக்கச் செய்தனர். தேவர்களையும் படைத்தவள் அவளே. முந்திய கதையின் படைப்புத் தாயை அவளோடு பகைத்து நின்ற தேவர்களும் ஒப்புக்கொண்டனர். ஏனெனில் பாபிலோனியா முழுவதும் முதற்படைப்புத் தெய்வமாக இருந்த தியாமத்தை பிந்திய படைப்புக் கதையில் ஒதுக்கிவிட முடியாது.