பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ఫ్గ 31 * * • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • HERETHI ITIEEEEEEas قgE R. Ed இணைப்பாகத் தோன்றிய கதை. இதில் படைப்பின் முதல் தெய்வமாக பூமிதேவி கூறப்பட்ட போதிலும், அவளுடைய மகனே அவளது கணவனாகி, உலகில் தாவரங்களையும் உயிரினங்களையும் படைத்தான் என்று கூறப்படுகிறது. நூறு கையுடைய அரக்கர்கள் தாய் வழிச் சமுதாயத்தின் கைத்தொழிலாளர்கள் என்பதும் அவர்களால் வலிமைபெற்ற தாய்வழிச் சமுதாயத்தை அழிக்க அவர்களுடைய பகைவர்களின் கொலைச் செயல்கள் இப் புனைகதையில் அப்பாலோ என்ற ஹெலனிக் ஆண் தெய்வத்தின் செயலாகவும் கூறப்பட்டது. 4. நான்காவது கதை ஒரு தத்துவ ரீதியான படைப்புக் கதை." இது புனைகதையாக இல்லாமல் வளர்ச்சியடைந்த தத்துவ-சமயக் கருத்தாக இருப்பதால் இதனை நாம் ஒதுக்கிவிடலாம். இனி பைபிளில் கூறப்படும் யூதர்கள் அல்லது இஸ்ரவேலர்களின் படைப்பு வரலாற்றைக் கவனிப்போம். இக்கதையின் தேவன் ஆவியாக அசைந்தாடி வானையும் கடலையும் பிரித்தார். சூரியன், சந்திரன், நட்சத்திரங்களைப் படைத்தார். தாவரங்களையும், விலங்குகளையும், பறவைகளையும் படைத்தார். கடைசியில் தன்னுருவத்தில் மனிதனைப் படைத்தார். மண்ணால் உருவம் செய்து அதில் தனது மூச்சை ஊதினார். முதல் மனிதன் ஆதாம் உயிர் பெற்றான். இக்கதையைப் புனைந்தவர்கள் தந்தை வழிச் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். இஸ்ரவேலர்கள் பைபிள்' வருணனைப்படி மேய்த்தல் தொழில் உடையவர்கள். ஆணாதிக்க சமுதாயத்தின் கற்பனையின்படியே இவர்கள் பெண்ணின் பாத்திரமில்லாமல் உலகு படைக்கப்பட்ட கதையைப் புனைந்தார்கள். அது மட்டுமல்ல. ஒரே ராஜ்யமாக, ஒர் அரசனின் கீழ் ஒன்று திரண்டு பகைவர்களை எதிர்த்ததால்தான் இவர்கள் ஒரே கடவுள் என்ற பண்பாட்டுச் சிந்தனையுடையவர்களாயிருந்தனர். இவர்களுடைய இனத்திற்கு தாய் வழிச் சமுதாயத்தின் முற்காலம் இல்லாததால் படைப்புக் கதையில் தாயின் தேவையே ஏற்படவில்லை. இந்திய-ஆரியப் படைப்புக் கதைகள் வேதத்தில் முக்கியமாகக் கடவுளர்களே போற்றப்படுகிறார்கள். முக்கிய கடவுளர்கள் இந்திரன், மித்ரன், வருணன், ருத்ரன், அக்னி