பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ణీః 32 গুঞ্জ t હ : A a s ના આ પ્રમા * % # છ ના છે ? જ பழங்கதைகளும் பழமொழிகளும் இவர்களனைவரும் ஆண் ஆற்றலுடைய தேவர்களே. சூரியனும் ஆண் தெய்வமே பெண்கள் ஆண் தெய்வங்களின் மனைவிமார்களாகவே இரண்டாந்தரமதிப்புப் பெறுகிறார்கள். வேதகால ஆரிய கணங்களின் சமூகப் பண்பாட்டு நிலை பற்றியும், அந்நிலையில் எழுந்த தெய்வக் கருத்துக்கள் பற்றியும் பின்னர் காண்போம். அதற்கு முன் ரிக்வேதத்தில் புருஷசூக்கத்தில் கூறப்படும் உலகப் படைப்பு பற்றிக் கூறுவோம். 'புருஷன் என்ற பெயரே ஆணைக் குறிக்கும். அவனைப் பற்றி ரிக் வேதம் கூறுவதாவது: புருஷனுக்கு ஆயிரம் தலைகள், ஆயிரம் கண்கள், ஆயிரம்கால்கள், உலக முழுவதிலும் பத்து விரற்கடை இடத்தை அவன் உருவம் அடைத்துக் கொள்ளும். இப்புருஷனே இப்பொழுது இருக்கும் எல்லாமாகவும் இனி வரப்போகும் எல்லாமாகவும் இருக்கிறான். அழிவில்லாத அவன் உணவால் பெருக்கமுற்று இருக்கிறான். அவனது பெருமை உயர்ந்தது. அதனினும் பெரியவன் புருஷன். முக்கால் பங்கு புருஷன் மேலே போய்விட்டான். கால் பங்கு இங்கேயிருக்கிறான். தின்பது, தின்னாதது எல்லாவற்றின் பக்கத்திலும் அவன் நடந்தான்.” இவ்வாறு புருஷனை வருணித்து விட்டு, அவனைத் தேவர்கள் பலியிட்டதாகவும், அவனுடைய உடலின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் சூரியன், சந்திரன் முதலிய கோளங்களும் உலகமும், விலங்குகளும், பிராம்மண, கூடித்திரிய, வைசிய சூத்திரங்களும் தோன்றியதை இப்புருஷசூக்தம் விவரிக்கிறது. வேதத்தில் ஆணாதிக்கக் கருத்து வன்மையாகக் காணப்படுகிறது. பிரபஞ்ச முழுவதும் முதல் ஆணினின்றும் தோன்றியதாக இந்நூல் கூறுகிறது. இது ஏன்?"அவர்களுடைய பொருளாதார அமைப்பை மீறி அவர்களுடைய கற்பனை செல்ல முடியாது. புருஷசூக்கத்தில் சூட்சும சிந்தனை சிறிதளவு உள்ளது. ஆயினும் அச்சிந்தனை மாடு மேய்ப்பவர்களின் சமூகத்தில் வாழ்பவர்களது சிந்தனையாகவே உள்ளது. அவர்கள் ஆண்களின் உயர்வில் நம்பிக்கையுடையவர்கள்.” எனவே படைப்பிலும் ஆணைப் பலி கொடுத்து உலகம்