பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ត្រី... ឱ៖េ » ... « » ... « - » ... « » ... « » 曾 曲 吻 % 8 例 驴 é 始 & & 4 + உண்டாக்கப்பட்டதாகக் கருதி ஒரு கற்பனைப்புருஷனது புனைகதையை உலகப் படைப்பை விளக்கப் படைத்தார்கள். பிற்கால நாராயணப் படைப்புக் கதைகளும் ஆணாதிக்கக் கருத்தையே வெளியிடுகின்றன. 'நாராயணன் வேத காலத்தில் ஆரியர்கள், ஆரியரல்லாதவர்களிடமிருந்து ஏற்றுக்கொண்ட கடவுள் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். விஷ்ணு வேதத்தில் சிறு தெய்வம். நாராயணன் வேதக் கடவுளன்று. நாரா என்றால் நீர் என்பது சம்ஸ்கிருதத்தில் பொருள். நீரின் மீது உறங்குபவனாகப் பண்டைப் புனைகதைகள் அவனை சித்திரிக்கின்றன. அவன் பாம்பின் மீது உறங்குபவன். பாம்பு பண்டைய இனங்களின் குலக்குறி.” நாராயணனைத் தெய்வமாகக்கொண்ட வளர்ச்சி பெற்ற இனக்குழுக்கள், ஏதோ ஒரு நாகக்குலக் குறியுடைய இனக்குழுவை வென்றதால் இது அவனுடைய படுக்கையாக ஆக்கப்பட்டது. நாராயணன் பாற்கடலில் பாம்பின் மீது உறங்குகிறான். அவனது நாபியிலிருந்து ஒரு தாமரை தோன்றுகிறது. அதிலிருந்து லட்சுமியும், பிரமனும், சந்திரனும் தோன்றுகிறார்கள், பிரமன் உலகைப் படைத்தான். இக்கதையில் பாற்கடலும், ஆண் உலகத்தைப் படைத்தலும், மாடு மேய்ப்பவர்களின் கற்பனைகளாகவும், கருத்துக்களாகவுமே தோன்றுகின்றன. உலகைப் படைத்தது ஆணா பெண்ணா? இனி இக்கதைகள் அனைத்திலும் உலகு, 1. பெண்ணால் படைக்கப்பட்டது; 2. ஆனால் படைக்கப்பட்டது; 3. பெண் ஒரு பகுதியையும், ஆண் மற்றோர் பகுதியையும் படைத்தார்கள் என்ற மூன்று கருத்துக்கள் காணப்படுகின்றன. ஒவ்வொன்றிலும் சமூக அமைப்பு எவ்வாறு இக்கருத்துகள் தோன்றக் காரணமாயிருந்தன என்பதைக் கூறியுள்ளோம். இங்கு சமுதாய மாற்றங்கள் எப்படி படைப்பக் கருத்தையும், படைப்புத் தெய்வங்களின் ஆண் அல்லது பெண்பாலையும் தீர்மானிக்கின்றன என்று காண்போம். பண்டையச் சமுதாயங்களிலும், இன்றைய பழங்குடிச் சமுதாயங்களிலும் ஆணாதிக்கம் அல்லது பெண்ணாதிக்கம் அல்லது