பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திE. EானEEஇை . . . . . . . . . . . . 《炒 * 必 8 融 》 w 物 》政 研 ó * 心 6 35 জ্ঞ இருப்பதற்குக் காரணம் அவர்களுடைய சமுதாய வளர்ச்சி அந்நிலையில் தேங்கியிருப்பதேயாகும். வரலாற்று முற்காலத்தில் விரைவாக வேட்டைச் சமுதாயத்திலிருந்து விவசாய சமுதாயத்திற்கு மாறிய குழுக்களில் தாய்வழி உரிமை, அச்சமுதாயம் மாற்றமடைந்த பின்னும் தொடர்ந்து நீடித்தது.” இது குறித்து தேவி பிரசாத் சட்டோபாத்தியாயா கூறுவதாவது: "ஆண், பெண் உயர்வு தாழ்வுகளுக்குக் காரணம் பொருளாதார வாழ்க்கையின் வளர்ச்சியே. வேட்டைக்கு (ஈட்டியைப் பயன்படுத்துதல்) முற்கால சமுதாய நிலையில் தாயுரிமை இருந்தது. வேட்டை வளர்ச்சி பெற்றபோது ஆண்களுக்கு சமூகத்தில் உயர்வு ஏற்பட்டது. வேட்டைச் சமுதாயம் ஆடுமாடு வளர்ப்புச் சமுதாயமாக மாறிய பின் பெண்ணுக்குச் சமூகத்தில் உயர்வு ஏற்பட்டது. அதனால் தாய்வழி உரிமை மீண்டும் அவர்களிடையே தோன்றியது. காளைகள் இழுக்கும் கலப்பையைப் பயன்படுத்தி நிலத்தை உழும் பயிர்த்தொழில் தோன்றிய பின் தாயுரிமை முற்றிலும் மறைந்துவிட்டது. ஆயினும் அதன் எச்சங்களைத் தந்தையுரிமைச் சமுதாயத்தில் காணலாம்.” “தேவர்களும், தேவிகளும், மனித உருவில் மனித சிந்தனையால் படைக்கப்பட்டவர்களே. ஆண், பெண் பாலாரின் தராதர உயர்வு தாழ்வுகள் மாறின. வேட்டை, ஆடு மாடு வளர்த்தல் ஆகிய தொழில்களை அடிப்படையாகக் கொண்ட சமுதாயங்களில் ஆண் ஆதிக்கம் இருந்தது. அச்சமுதாயங்களில் மக்களால் வணங்கப்பட்ட தெய்வங்கள் ஆண்களாகவே இருந்தன. ஆரம்பகால விவசாய சமுதாயங்களில் பெண் ஆதிக்கம் இருந்ததால் அச் சமுதாயங்களில் பெண் தெய்வங்களே ஏற்றம் பெற்றன.” இவ்வாறு சமுதாய மாற்றங்களால் ஏற்பட்ட சிந்தனை மாற்றங்களால் படைப்புக் கதைகளிலும் கதைமாந்தர்கள் ஆண் அல்லது பெண்ணாக இருப்பதைக் காணலாம். மேலே உதாரணங்களாகக் காட்டிய மிகப் பழைய வரலாற்று முற்காலக் கதை மூலங்கள் இவ்வுண்மையை விளக்குகின்றன. படைப்புக் கதைகளில் பாம்பும், பலியிடுதலும் இனி முக்கியமற்ற சில கூறுகளைப் பற்றி ஆராய்வோம். படைப்புக் கதைகள் பலவற்றில் பாம்பிற்கு இடமளிக்கப்பட்டுள்ளது. இது ஏன்?