பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ:ே ZYSYmmmmmmmmmmm SAAAAAS AA SAASAASAASAASAAAS 43 மயோரிப் புனைகதையைக் கூறலாம். நாகரிக நிலை உயர உயர எளிய புனைகதைகளை இணைத்து மிகவும் சிக்கலான புனைகதைகளைப் படைத்தான். தொழில் பிரிவினை அதிகரித்து வர்க்கங்கள் பிரியக்கூடிய நிலையில் இருந்த சமுதாய மனிதன், இனக்குழு மனிதன் படைத்த கதைப்படிமங்களை இணைத்து புதிய படைப்புக் கதைகளை உருவாக்கினான். 'உலகம் எவ்வாறு தோன்றியது? என்ற வினாவிற்கும் வகை மாதிரியான இனக்குழு நிலையிலிருந்து நாகரிகநிலை அடைந்து வந்த மனிதனின் மனதில் சில வகை மாதிரியான (Types) விடைகளே தோன்றியிருக்கிறது. இதில் நான்கு வகையான தோற்றத்திற்கான காரணங்களைக் காண்கிறோம். இக்கட்டுரையில் 30 புனைகதைகள் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. முதல் வகையான கதைகளில் பண்டைக் காலத்தில் ஒருமையாக இருந்த உலகம், இரண்டு மூன்று அல்லது பலவாகப் பிரிகிறது, பிரிவதற்குரிய காரணங்களில் வேறுபாடு இருக்கலாம். 1 முதலில் பூமியும் வானமும் பிரிந்தன. 2. உலகத்தின் பெற்றோர்கள் பிரிந்து உலகைப் பிரித்தனர். குழப்பமான, அருவமான உலகம், தெளிவாக இரண்டு மூன்றாக வேறுப்பட்டு பிரிகிறது. 4. பகிரண்ட முட்டை இரண்டாக வெட்டப்பட்டது. வேட்டை வாழ்க்கை நிலையில் வாழுகிற அமெரிக்க இந்திய இனக்குழு"வின்னிபாகோ” என்ற சமுதாயத்தில் உலகப் படைப்புப்பற்றி வழங்கும் கதை மிகவும் எளிய கற்பனை கொண்டது. அவர்கள் தங்கள் முதல் முன்னவனை, முதல் தந்தை என்று அழைத்தனர். அவர் ஒருமையான உலகைப் பிரித்தார். எப்படி? கதை சொல்லுகிறது: முதலில் உருவங்கள் இல்லை. நம் தந்தை ஒரு கனவு நூலில் கட்டியிருந்த நமீனா என்னும் மாயையைத் தழுவினார். அதில் எதுவும் இல்லை. இந்த வெறுமையை மந்திர கோந்தினால், பஞ்சினால் ஒட்டினார். உலகத் தோற்றத்தை அவர் அறிந்தார். அவர் பல தடவை