பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

థీ 44 . . . . . . . . . . . . . . . . பழங்கதைகளும் பழமொழிகளும் துப்பினார். காடுகள் தோன்ற வேண்டும் என்று விரும்பினார். பூமியும் காடுகளும் உண்டாயின. பின்னர் ஒரு மண்கட்டியை எடுத்து மனிதனை உருவாக்கினார். அவர் மூச்சுவிட்டார். பின்னர் அதனோடு பேசினார். அது பதில் சொல்லியது." இக்கதையில் ஒரு படைப்பாளி உண்டு. ஆனால் அவர் கடவுள் அல்லர் சர்வ சக்திமானும் அல்லர், மந்திரச் செயல்புரிகிற ஷாமன் என்ற மனித இனத்தைச் சேர்ந்த வரும் அல்லர். ஆனால் அதே சக்தியுடைய மனித இயல்பு வாய்ந்தவர் தாம். இவர் ஒருமையான அவ்யக்தமான உலகை வியக்தமாகப் பிரிக்கிறார். அதற்கு மந்திரவாதத்தைப் பயன்படுத்துகிறார். படைப்பாளிகள் உலகும், காடும், மனிதனும் தோன்றிய விதத்தைத் தங்கள் சமூக நிலையில் தோன்றிய கற்பனையால் படைத்துள்ளார்கள். மனிதன் ஒருமண்கட்டியிலிருந்து தோன்றியவனே. "நமது தந்தை மூச்சு விட்டார். மனிதனும் மூச்சுவிடத் தொடங்கினான்.” இது தொத்து மந்திரச்செயலாகும். நாம் செய்வது போல, உயிரற்றவற்றைச் செய்ய வைக்கலாம் என்ற மந்திரவாத நம்பிக்கை இதில் வெளிப்படுகிறது. மயோரி என்ற இனக்குழு மக்களின் படைப்புப் புனைகதை வருமாறு: அது எல்லையற்ற பரப்பான விண்ணில் வாழ்ந்தது. விண் முழுவதும் இருட்டாயிருந்தது. ஒளி சிறிதும் இல்லை. சுறுசுறுப்பாய் இருக்க அது முடிவு செய்தது. இருளில் ஒளியைத் தோற்றுவிக்க எண்ணியது. ஆயினும் இருள் குறையவில்லை. ஒளிமிக்க இடம் ஒளிமிக்க இடம் என்று அது ஜபித்தது. தன்னைச் சூழ்ந்திருக்கும் நீரோடு அதுபேசியது. நீரே நீ தனியாக இரு: விண்ணுலகம் தனியாக இருக்கட்டும் உடனே இயங்கும் உலகம் அதன் காலடியில் கிடந்தது.