பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ക്ട 骚辐。每罚函醚··························· 45 இச்சொற்கள் நமது முன்னோர்களின் மனதில் பதிந்தன. பரம்பரை பரம்பரையாக இச்சொற்கள் இறக்கி வந்தன. நமது புரோகிதன் மகிழ்ச்சியாக அதனை ஜீவன் என்றான். எல்லையற்ற வெற்றிடத்திலுள்ள விண்ணே கடல் நீர் சாட்சியாக இருக்கட்டும் புதிதாகத் தோன்றிய விண்ணே நீ உலகத்தைப் பெற்றெடுத்தாய் இந்தக் கதையோடு சேர்ந்த மூன்று சடங்குகள் உள்ளன. முதல் சடங்கு குழந்தையைப் பூமியின் வெற்றுக் கருப்பையில் ஊன்றுவது. இரண்டாவது சடங்கு உடலையும் உள்ளத்தையும் அறிவால்துலக்குவது. மூன்றாவது, சாவையும் போரையும் பற்றிய பாட்டையும் இனக்குழுவின் பரம்பரைப் பாட்டையும் பாராமல் சொல்லுவதாகும். எந்தச் சொற்களால் இயோ உலகத்தைப் படைத்தானோ, இருளில் இருந்து ஒளி வீசும் உலகை உண்டாக்கினானோ, அவற்றையே மூன்று சடங்குகளிலும் மக்கள் உச்சரிக்கிறார்கள். வெற்றுக் கருப்பையில் விதையை ஊன்றுவதற்கும் உலகைப்படைப்பதற்கும் பயன்படும் மந்திரம் ஒன்றே." இங்கும் படைப்பாளி உண்டு. அவன் இறைவன் அல்ல. மந்திரவாதியின் பண்புகளை மிகைப்படுத்திக் கருத்தால் படைக்கப்பட்ட ஒரு கற்பனை வடிவமே அவன். இங்கும் தொத்து மந்திரச் செயலும், சொல்லும் மந்திரச் சொற்களும் பயின்று வரக் காண்கிறோம். மந்திரவாத நம்பிக்கையில் இருந்துதான் படைப்புக்கதை உருவாகி உள்ளது. மந்திர சக்தி படைத்த மனித உருவத்திலிருந்து, அச்சக்தியிலேயே மிக அதிகம் பெற்ற ஒரு உயிரைக் கற்பனை செய்து உலகைப் படைத்தவனாகக் கொள்ளுகிறார்கள். மூன்று மந்திரங்களும், விருப்பத்தை வெளியிடுகின்றன. விருப்பத்தோடு தொடர்பில்லாத செயல்கள் செய்யப்படுகின்றன. மந்திரத்தின் சக்தியால் செயல்கள் நடைபெறுகின்றன. இயற்கையின் செயல் மானுடச் செயல்களை ஒத்திருப்பதாகக் கருதுவது மானுடத்தன்மைச் செயல் (anthropomorphic) என்று வழங்கப்படும்.